சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பினும் மஹிந்திரா க்ரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எளிய மக்களின் திறமைகளை ஊக்குவிப்பதில் எப்போதும் தவறியது இல்லை. இந்த வகையில் நமது சென்னை ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆனந்த் மஹிந்திராவை வெகுவாக கவர்ந்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

ஒரு காலத்தில் தொழிலதிபர்களும், செல்வந்தர்களும் எளிய சாமானிய மக்களின் வாழ்க்கையில் இருந்து சற்று தூரத்திலேயே இருப்பர். ஆனால் தற்போது இணையத்தினாலும், செல்போன் & கணினி உள்ளிட்டவற்றினாலும் இந்த இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டுவிட்டரில் பிரபலங்களும் அவர்களது ரசிகர்களும் மிகவும் சகஜமாக பேசி கொள்வதை பார்த்திருப்போம். அதேநேரம் சாமனியரின் திறமைகள் மிக விரைவாகவே வைரலாகிவிடுகிறது. இதன் மூலமாக பலரது வாழ்க்கை ஒரே நாளில் புகழின் சென்றுள்ளது. அதேநேரம் சிலரது வாழ்க்கை அஸ்தமனமாகியுள்ளது.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

நாம் இந்த செய்தியில் மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா உள்பட பலரை கவர்ந்த ஆட்டோ டிரைவரை பற்றி பார்க்கவுள்ளோம். அண்ணா துரை என பெயர் கொண்ட இந்த ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவில் இலவச வைபை, செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், சிற்றுண்டி உள்பட தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஏகப்பட்ட எலக்ட்ரிக் கருவிகளையும் வைத்துள்ளார்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

இவை அனைத்தும் இலவசமாம். இவற்றின் மூலம் தனது ஆட்டோவில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் சிறந்த பயண அனுபவத்தை பெற வேண்டும் என்பது அண்ணா துரையின் எண்ணமாக உள்ளது. இவரது வணிக நுட்பங்களை பற்றி அறிந்த மஹிந்திரா சேர்மன், இவரை பற்றி வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவினை குறிப்பிட்டு அண்ணா துரையின் வாடிக்கையாளர் மேலாண்மை திறன்களை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

மேலாண்மை பேராசிரியர் என இவரை புகழ்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பான தனது டுவிட்டில், "எம்பிஏ மாணவர்கள் இவருடன் ஒருநாள் செலவிட்டால், அது அவர்களுக்கு வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மையை பற்றி அறிய ஒரு சுருக்கமான பாடமாக அமையும். இந்த ஆள் (அண்ணா துரை) ஆட்டோ டிரைவர் மட்டுமல்ல... நிர்வாக பேராசிரியர்" என குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுனர் அண்ணா துரையிடம் வார பத்திரிக்கைகள் மற்றும் புத்துணர்ச்சியாக்கி மட்டுமின்றி, ஐபேட் ப்ரோ, லேப்டாப், AWS அழமாக ஆராயும் லென்ஸ், அமேசான் எக்கோ மற்றும் கூகுள் நெஸ்ட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் தொழிற்நுட்பங்களும் உள்ளன. இவற்றை வாடிக்கையாளர்கள் பயணத்தின்போது உபயோகிக்கலாம் என்கிறார் இந்த ஆட்டோ டிரைவர்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

இவ்வாறான யோசனை எங்கிருந்து வந்தது? எது இவரை இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வைத்தது? என்று இந்த அண்ணா துரை உடன் பேச துவங்கினோம். அவர் கூறுகையில், "எனது வாடிக்கையாளர்களே எனது கடவுள். என்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறும் பணத்தின் மூலமாக என்னால் தற்சமயம் சவுகரியமான வாழ்க்கையை வாழ முடிகிறது" என்றார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் ஆக வேண்டும் என்பது முதலில் இவரது திட்ட கிடையதாம்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாக இருந்துள்ளது. ஆனால் காலத்தின் கட்டாயத்தால் ஆட்டோ ஓட்டுனர் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் தற்போது தனது தொழிலை மிகவும் விரும்புவதாக மெல்லிய சிரிப்புடன் அண்ணா துரை தெரிவிக்கிறார். சூழ்நிலையால் ஆட்டோ ஓட்டுனராக மாறினாலும், இப்போது இவருடனான சவாரிக்காக வாடிக்கையாளர்கள் தினந்தோறும் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

சில சமயங்களில் மணிக்கணக்கில் காத்திருந்து கூட வாடிக்கையாளர்கள் தனது ஆட்டோவில் பயணம் செய்வதாக கூறும் ஆட்டோ டிரைவர் அண்ணா துரை சுகாதார பணியாளர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இலவச சவாரியையும் வழங்கி வருகிறார். இவரது வீடியோவிற்கு தனது கருத்தினை தெரிவித்த மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தனது பதிவின் இறுதியில் சுமன் மிஷ்ராவையும் டேக் செய்துள்ளார்.

சென்னையில் இப்படியொரு ஆட்டோ டிரைவரா!! ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துட்டாரு... செம்ம ஐடியாஸ்!

இதன் மூலமாக மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ சுமன் மிஷ்ராவின் பார்வைக்கும் இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர் செல்ல, அவர் "உண்மையில் இது வாடிக்கையாளரை மையமாக கொண்ட சிறந்த கண்டுபிடிப்பு! இத்தகைய மனநிலையை கொண்ட அண்ணாதுரைக்கு ஒத்துழைக்க, கற்றுக்கொள்ள மற்றும் அளவிட நாங்கள் மஹிந்திராஎலக்ட்ரிக் ஆர்வமாக உள்ளோம்" என பதிலளித்துள்ளார்.

அண்ணா துரையின் சமூக வலைத்தள பக்கங்களில் பியாஜியோ இ-சிட்டி எலக்ட்ரிக் பயணிகள் 3-சக்கர வாகனத்துடன் அவர் நிற்கும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Auto driver from chennai impressed anand mahindra details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X