ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

போதிய அளவு சவாரி கிடைக்காத காரணத்தால், ஆட்டோ, டாக்ஸிகளை விற்பனை செய்து விட்டு வேறு தொழிலுக்கு மாற வேண்டிய நெருக்கடிக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலதரப்பட்ட மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் முக்கியமானவர்கள். கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட உடனேயே ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கு அரசு தடை விதித்தது. இதனால் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் வருவாய் இழந்தனர்.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

தற்போது ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை இயக்குவதற்கு அரசு அனுமதி வழங்கி விட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக ஆட்டோ, டாக்ஸிகளில் பயணிப்பதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதிலாக தங்களின் சொந்த வாகனங்கள் அல்லது தெரிந்தவர்களின் வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

எனவே போதிய அளவிற்கு சவாரி கிடைக்காமல் இன்னமும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனர். இதில், பலர் ஆட்டோ, டாக்ஸிகளை ஓட்டுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இன்னும் சிலரோ ஆட்டோ, டாக்ஸிகளை விற்பனை செய்து விட்டு நிரந்தரமாக வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில், ஆட்டோ, டாக்ஸிகளை விற்பனை செய்யும் முயற்சிகளில் பல ஓட்டுனர்கள் தீவிரமாக களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதிய அளவிற்கு சவாரி கிடைக்காத காரணத்தால், போபால் நகரில் மட்டும் சுமார் 4,000 ஆட்டோக்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

போபால் ஆர்டிஓ அலுவலகங்களில் சுமார் 10,000 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4,000 ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கவலையளிக்க கூடிய ஒரு விஷயம்தான். ஆட்டோ ஓட்டுனர்கள் எந்த அளவிற்கு கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர் என்பதை இது நமக்கு எடுத்துக்காட்டுவது போல் அமைந்துள்ளது.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

தற்போதைய சூழ்நிலை மிகவும் சவாலாக இருப்பதாக ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கூறியுள்ளனர். இதுகுறித்து அக்ஸய் ஜெயின் என்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், ''ரயில், விமானங்களின் போக்குவரத்து குறைந்திருப்பதும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதும் எங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

தற்போதைய நிலையில் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தில் (போபால் நகரில் உள்ள ரயில் நிலையம்), வெறும் 20 சதவீத பயணிகளுடன்தான் நாங்கள் வேலை செய்து வருகிறோம்'' என்றார். ஆட்டோக்களின் இயக்கம் சுமார் 50 சதவீதம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்ஸய் ஜெயின் கூறுகையில், ''தற்போது ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தில் 80-100 ஆட்டோக்கள் மட்டுமே உள்ளன.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

ஆனால் ஊரடங்கிற்கு முன்பு, இந்த ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் 150 ஆட்டோக்களாவது இருக்கும்'' என வேதனையுடன் தெரிவித்தார். தங்களுக்கு வேறு வழியில்லை எனவும், வேறு ஏதேனும் ஒரு தொழிலுக்கு மாற வேண்டிய சூழல் இருப்பதாகவும் ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ரஹ்மான் என்ற ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில், ''ஆட்டோ ஓட்டுனர்களிடம் பணம் இல்லை.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

இதனால் சுமார் 4,000 ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. காய்கறிகளை விற்பனை செய்வது அல்லது வேறு ஏதேனும் ஒரு தொழிலுக்கு மாறியாக வேண்டிய நெருக்கடிக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் தள்ளப்பட்டுள்ளனர்'' என்றார். ஆட்டோ ஓட்டுனர்களின் நிலைமைதான் டாக்ஸி மற்றும் கேப் ஓட்டுனர்களுக்கும் காணப்படுகிறது.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

பெயர் வெளியிட விரும்பாத கேப் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''ஊரடங்கிற்கு முன்பு போபால் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் எங்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் நிலைமை தற்போது அப்படியே தலைகீழாக மாறி விட்டது'' என்றார். டாக்ஸி ஓட்டுனர்களும் தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

இதுகுறித்து அர்ஜூன் சிங் என்ற டாக்ஸி ஓட்டுனர் கூறுகையில், ''ஊரடங்கிற்கு முன்பாக போபால் விமான நிலையத்திற்கு விமானங்கள் மிகவும் அதிகமாக வந்து செல்லும். தேவை உயர்ந்து கொண்டே வந்ததால், இன்னொரு டாக்ஸியை நான் வாங்கினேன். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. எனவே ஒரு டாக்ஸியை கடந்த வாரம் விற்பனை செய்து விட்டேன்.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

நிலைமை இப்படியே தொடர்ந்தால், நான் இன்னொரு டாக்ஸியையும் விற்பனை செய்தாக வேண்டிய சூழல் ஏற்படும்'' என்றார். ஆட்டோ மற்றும் டாக்ஸிகளை பயன்படுத்துவதை மக்கள் குறைத்து கொண்டுள்ளதால், ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை போன்ற சூழல் தற்போது இல்லை. ஆனால் மறுபக்கம் கார் உற்பத்தி நிறுவனங்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளன.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களில் பயணம் செய்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தால், ஏற்கனவே கூறியபடி சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானது என கருதுகின்றனர். எனவே வரும் மாதங்களில் கார்களின் விற்பனை உயரும் என ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன.

ஆட்டோக்களை விற்பனை செய்து விட்டு காய்கறி விற்கும் உரிமையாளர்கள்... செம ஜாலி மூடில் கார் நிறுவனங்கள்

அத்துடன் தீபாவளி பண்டிகை காலமும் நெருங்கி வருவதால், கார் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேபோல் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் உயரலாம் என்று ஆட்டோமொபைல் துறையை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Auto, Taxi Drivers Sell Vehicles Due To Covid-19 Lockdown. Read in Tamil
Story first published: Saturday, August 29, 2020, 21:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X