சும்மா குடுத்தா கூட இந்த மாருதி காரை யாரும் வாங்க மாட்டாங்கலாட்ட இருக்கு... சேல்ஸ் படுத்துருச்சு...

பொதுவாக இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகும். ஆனால் விதிவிலக்காக மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில கார்களும் விற்பனையில் தடுமாறி கொண்டுதான் உள்ளன. இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) ஒரு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.

இந்திய சந்தையில் பெரும்பாலான மாதங்களில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திலும் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் மந்தமாகவே இருந்துள்ளது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Maruti Suzuki S-presso Interior

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 226 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1,788 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,562 மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 87.36 சதவீத வீழ்ச்சி ஆகும். மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கார் மிகவும் விலை குறைவானது ஆகும். இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. ஆனால் இந்திய சந்தையில் சமீப காலமாகவே மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது. அதற்கு பதிலாக எஸ்யூவி ரக கார்களைதான் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

Maruti Suzuki S-presso

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் வீழ்ச்சிக்கு இதுவே மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மட்டுமல்லாது, இந்த செக்மெண்ட்டை சேர்ந்த ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களின் விற்பனை எண்ணிக்கையும் இந்திய சந்தையில் மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 3.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ கருதப்படுகிறது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 5.25 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை அனைத்தும மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மிகவும் குறைவான விலையில் ஒரு புதிய காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முதல் முறையாக கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்கள், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. குறைவான விலை என்பது மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ காரின் மிகப்பெரிய பலம். ஆனால் பாதுகாப்பு சோதனைகளில் நல்ல ஸ்டார் ரேட்டிங்கை பெற தவறியது இதன் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 11, 2026, 23:46 [IST]
English summary
Maruti suzuki s presso sales report march 2026 87 per cent growth
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+