வெறும் 4 லட்சத்துக்கு புது கார்! 7 பேர் போலாம்! ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாதான் செலவு! இந்தியாவையே மிரள விடும் மாருதி
இந்திய கார் சந்தையில் நம்பர்-1 நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருந்து வருகிறது. ஆனால் ஐசி இன்ஜின் கார் செக்மெண்ட்டில்தான் மாருதி சுஸுகி நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளது. எலெக்ட்ரிக் கார் (Electric Car) செக்மெண்ட்டில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்கள்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஆனால் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையிலும் நம்பர்-1 இடத்தை பிடிக்க வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) எலெக்ட்ரிக் கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதை தொடர்ந்து மேலும் 4 புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவை என்னென்ன எலெக்ட்ரிக் கார்கள்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஒய்எம்சி (Maruti Suzuki YMC): மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 2வது எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது ஒய்எம்சி ஆகும். ஒய்எம்சி என்பது குறியீட்டு பெயர் மட்டுமே. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது வேறு பெயர் சூட்டப்படும். இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

எனவே இந்திய சந்தையில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன் இது போட்டியிடும். இந்திய சந்தையில் இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 17 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை பாஸ் (BAAS - Battery As A Service) திட்டம் வழங்கப்பட்டால், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால் நீங்கள் இந்த முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 4 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது எலெக்ட்ரிக் கார் என்பதால், ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு அனேகமாக வெறும் 1 ரூபாய் அல்லது 1.50 ரூபாய் வரை மட்டும்தான் செலவாகும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அவை 49 kWh மற்றும் 61.1 kWh ஆகியவை ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 400 கிலோ மீட்டர்கள் மற்றும் 500 கிலோ மீட்டர்களுக்கு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற அதிநவீன வசதிகளையும் இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஸ்ஸா அல்லது ஃப்ரான்க்ஸ் இவி: மாருதி சுஸுகி நிறுவனம் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக இது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) அல்லது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) என ஏதாவது ஒரு காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம்.
இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருடன் போட்டியிடும். இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 12 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை பாஸ் திட்டம் வழங்கப்பட்டால், 8-9 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கி விட முடியும்.
மிக குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார்: இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இதற்கு நேரடி போட்டியாக ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அனேகமாக இதன் ஆரம்ப விலை வெறும் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படவுள்ளது. ஒரு வேளை பாஸ் திட்டம் வழங்கப்பட்டால் 4-5 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கி விட முடியும். இது டாடா டியாகோ இவி மட்டுமல்லாது, எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் காருக்கும் விற்பனையில் நேரடி போட்டியை அளிக்கும்.
பிரீமியம் எலெக்ட்ரிக் கார்: இந்த வரிசையில் விலை உயர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது பிரீமியம் எலெக்ட்ரிக் கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு சற்றும் பஞ்சம் இருக்காது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அனேகமாக வரும் 2031ம் ஆண்டிற்குள் இந்த 4 புதிய எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 4 எலெக்ட்ரிக் கார்களில் முதல் எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு (2027) விற்பனைக்கு வரலாம். அதற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒன்று என 2031ம் ஆண்டிற்குள் எஞ்சிய 3 கார்களும் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்பட்சத்தில், இந்தியாவின் ஐசி இன்ஜின் கார் சந்தையை போலவே, எலெக்ட்ரிக் கார் சந்தையையும் மாருதி சுஸுகி நிறுவனமே ஆட்சி செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். இது டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் எம்ஜி மோட்டார் போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை உருவாக்கலாம். இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









