மிடில்-கிளாஸ் மக்கள் வாங்கக்கூடிய விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்! ஆனால் எந்த வேரியண்ட்டை வாங்குவது?
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து புதியதாக டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) கார் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இந்த கார் வெளியீடு செய்யப்பட்ட நிலையில், விரைவில் விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான தொழிற்நுட்ப அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கம்ஃபர்ட்லைன் (Comfortline): புதிய டைகுன் காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான இது 1 லிட்டர் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும். விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும், 6 ஸ்பீக்கர்கள் உடன் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை (வயர்டு கனெக்டிவிட்டி உடன் மட்டுமே), டச் க்ளைமேட் கண்ட்ரோல், மல்டிஃபங்க்ஷன் ஸ்டீயரிங் சக்கரம், காரின் உடல் நிறத்தில் பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் உள்ளிட்டவை கிடைக்கும்.

ஹைலைன் (Highline): இது 1 லிட்டர் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். தொழிற்நுட்ப அம்சங்களாக வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி உடன் 10-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரை, 8-இன்ச் டிஜிட்டல் காக்பிட், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமரா உள்ளிட்டவற்றை பெறலாம்.
ஹைலைன் பிளஸ்: இந்த வேரியண்ட்டும் 1 லிட்டர் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். மேற்கூறப்பட்ட ஹைலைன் வேரியண்ட்களில் கிடைக்கும் அனைத்து அம்சங்களுடன் கூடுதலாக பின்பக்கத்தில் வெல்கம் & குட் பாய் என்கிற அனிமேஷனை டெயில்லேம்ப்களில் பெறலாம்.

டாப்லைன் (Topline): இந்த வேரியண்ட்டிலும் 1 லிட்டர் என்ஜின் மட்டுமே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உடன் கிடைக்கும். ஹைலைன் பிளஸ் வேரியண்ட்டின் அனைத்து அம்சங்களுடன், விபரங்களை வழங்குவதற்கான டிஸ்பிளே உடன் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை, லைட் பேண்ட் உடன் ஒளிரக்கூடிய முன்பக்க க்ரில் & முன்,பின்பக்க ஃபோக்ஸ்வேகன் லோகோக்கள் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை பெறலாம்.
ஜிடி லைன் (GT Line): பவர்ஃபுல்லான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் குறைந்த விலையில் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த வேரியண்ட்டில் இருந்துதான் கிடைக்கும். மற்றப்படி, கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றம் இல்லை. மேற்கூறப்பட்ட ஹைலைன் பிளஸ் வேரியண்ட்டின் அம்சங்களுடன், காரின் வெளிப்பக்கத்தில் ஜிடி பேட்ஜ்கள், முன்பக்க கிரில் & கதவுகளில் சிவப்பு நிற ஹைலைட்கள், காரை சுற்றிலும் கருப்பு நிற தீம், ஸ்போர்டியரான இண்டீரியர் டீடெயிலிங் உள்ளிட்டவற்றை இந்த வேரியண்ட்டில் பிரத்யேகமாக பெறலாம்.
ஜிடி பிளஸ் க்ரோம் (GT Plus Chrome): இந்த வேரியண்ட் 1.5 லிட்டர் என்ஜின் உடன் பிரத்யேகமான 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும். டாப்லைன் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து அம்சங்களுடன் கூடுதலாக கதவுகளில் சிவப்பு நிறத்தில் ஜிடி எழுத்துகள், அதேபோல் உட்புறத்தில் சிவப்பு நிற ஹைலைட்கள் உடன் லெதரேட்டட் சீட் அப்ஹோல்ஸ்டரி, முன் இருக்கைகளில் சிவப்பு நிறத்தில் ஜிடி தையல் அலங்கரிப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கும்.
ஜிடி பிளஸ் ஸ்போர்ட் (GT Plus Sport): புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான இதுவும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும். இந்த டாப் வேரியண்ட்டிற்கு என்று பிரத்யேகமாக சிவப்பு நிற தையல்கள் உடன் கருப்பு நிற லெதரேட்டட் இருக்கைகளை ஃபோக்ஸ்வேகன் வழங்கியுள்ளது. இருப்பினும், இந்த வேரியண்ட்டிலும் வெண்டிலேட்டட் இருக்கைகளை பெற முடியாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்கிறது. மொத்தம் 7 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் எந்த வேரியண்ட்டை வாங்குவது என்பது அவரவர் தேவை மற்றும் விருப்பத்தை பொறுத்தது ஆகும். கம்மியான விலையில் இந்த காரை வாங்க விரும்புபவர்களுக்கு கம்ஃபர்ட்லைன் வேரியண்ட்டே போதுமானது. அதுவே லக்சரி கார்களுக்கு இணையான காரை பெற விரும்புகிறீர்கள் என்றால், டாப் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








