இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் லட்சக்கணக்கில் விற்பனையாகும் 3 மஹிந்திரா கார்கள்! நாடே போட்டிப் போட்டு வாங்குது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 6 லட்சத்து 60 ஆயிரத்து 276 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. 2025 ஏப்ரல் - 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)க்கு அடுத்து இரண்டாவது இடத்தை மஹிந்திரா பிடித்துள்ளது.
மஹிந்திரா விற்பனை செய்துள்ள 6,60,276 கார்களில் ஸ்கார்பியோ (Scorpio), தார் (Thar), பொலேரோ (Bolero) என்கிற நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் மூன்று கார்கள் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் அடங்குகின்றன. அதாவது, மஹிந்திராவின் மொத்த விற்பனையில் இந்த 4 கார் மாடல்கள் மட்டும் 61.3 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இதில் ஸ்கார்பியோ கார்கள் மட்டும் 1 லட்சத்து 64 ஆயிரத்து 222 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய சந்தையில், ஸ்கார்பியோ கிளாசிக் (Classic) மற்றும் ஸ்கார்பியோ-என் என்கிற இரு ஸ்கார்பியோ கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஸ்கார்பியோ கிளாசிக் ஆனது 20 வருடங்களுக்கும் மேலாக மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவிலான தோற்றத்தில் இப்போதும் விற்பனை செய்யப்படும் ஸ்கார்பியோ வெர்சன் ஆகும்.
அதுவே, ஸ்கார்பியோ-என் ஆனது இன்றைய கால மாடர்ன் டிசைனுக்கு ஏற்ப தோற்றத்தை கொண்டது ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ-என் ஆனது ஸ்கார்பியோ காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக செவ்வக வடிவிலான தோற்றத்தில் உருவாக்கப்படுகிறது. ஸ்கார்பியோவுக்கு அடுத்து தார் வாகனங்கள் கடந்த ஒரு வருடத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் ஏறக்குறைய 1.40 லட்சம் தார் வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களை போலவே, தார் வாகனமும் தார் மற்றும் தார் ராக்ஸ் (ROXX) என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தார் ஆனது 3 கதவுகளை மட்டுமே கொண்டதாகவும், தார் ராக்ஸ் ஆனது 5 கதவுகளை கொண்டதாகவும் உள்ளன.
பொலேரோவின் விற்பனையை பொறுத்தவரையில், கடந்த ஒரு வருடத்தில் 1 லட்சத்து 348 பொலேரோ வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட ஸ்கார்பியோ மற்றும் தார் வாகனங்கள் இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை இரண்டின் கூட்டு எண்ணிக்கையை தான் மேலே பார்த்தோம். ஆனால், பொலேரோ மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமாக யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ, தார், பொலேரோ என இவை மூன்றும் கடந்த ஒரு வருடத்தில் மொத்தமாக 4.05 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் சராசரியாக பார்த்தோமேயானால், ஒவ்வொரு மாதத்திலும் 13 ஆயிரத்து 685 ஸ்கார்பியோ கார்கள், 11,667 தார் வாகனங்கள் மற்றும் 8,362 பொலேரோ வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவில் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் இந்த மூன்று எஸ்யூவி கார் மாடல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை ஆகும். அதாவது, ஸ்கார்பியோ ஆனது பழமையான எஸ்யூவி கார்களை போன்று லேடார்-ஃப்ரேம் (Ladder-frame) எஸ்யூவி வாகனம் ஆகும். இதனாலேயே அது சாலையில் இயங்கும்போது ஸ்டைலான பொசிஷனை கொண்டிருப்பதுடன், பல்வேறு விதமான சீட் ஆப்ஷன்களில் உருவாக்கப்படுகிறது.
மறுப்பக்கம், பொலேரோ ஆனது லாரிகளை போன்று அதிக எடை சுமைகள் உடன் எந்தவொரு சாலையிலும் இயங்கக் கூடியதாகவும், அதிக ஆயுட்காலத்தை வழங்கக் கூடியதாகவும் உள்ளது. தார், மிகவும் கரடுமுரடான பாதைகளில் இயங்கக் கூடியதான ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனமாக விளங்குகிறது. 2024இல் தார் ராக்ஸின் அறிமுகத்திற்கு பிறகு குடும்பங்கள் பயன்படுத்தும் வாகனமாகவும் தார் விளங்க ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications








