ரூ.3 லட்சம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் மிட்-சைஸ் எஸ்யூவி.. இந்த வாய்ப்பை தவற விட்ராதீங்க!
சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டைகூன் (Taigun) எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன். ரூ.11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படவுள்ளது இந்த மேம்படுத்தப்பட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார். இந்நிலையில் அப்டேட்டிற்கு முந்தைய டைகூன் எஸ்யூவி மாடலானது பல்வேறு வகைகளில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்டேட்டிற்கு முந்தை டைகூன் மாடலானது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் கிடைக்கிறது. பல்வேறு வேரியன்ட்களாக இந்த மாடல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், டாப் எண்டான டாப்லைன் (Topline) வேரியன்டே மேற்கூறிய அதிகபட்ச தள்ளுபடியைப் பெற்றிருக்கிறது. ரூ.2.5 லட்சம் வரையில் பணத் தள்ளுபடியாகவும், ரூ.30,000 எக்சேஞ்சு போனஸாகவும், ரூ.20,000 லாயல்டி போனஸாகவும் என மொத்தம் ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

பழைய டைகூன் மாடலின் மற்ற வேரியன்ட்கள் குறைவான அளவு சலுகைகளையே பெறுகின்றன. ஹைலைன் பிளஸ் (Highline plus) வேரியன்டின் 2025ம் ஆண்டு தயாரிப்பு மாடலானது ரூ.80,000 வரையிலான பணத் தள்ளுபடியையும், 2026ம் ஆண்டு தயாரிப்பு மாடலானது ரூ.26,000 வரையிலான பணத் தள்ளுபடியையும் பெறுகிறது. இத்துடன் இந்த வேரியன்ட்களுக்கு ரூ.30,000 வரையிலான எக்ஸ்சேஞ்சு போனஸ் மற்றும் ரூ.20,000 வரையிலான லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது.
GT லைன் வேரியன்டிற் ரூ.50,000 வரையிலான பணத் தள்ளுபடியுடன், மேலே கூறியது போல எக்சேஞ்சு போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. தொடக்கநிலை வேரியன்ட்களான கம்ஃபர்ட்லைன் (Comfortline) மற்றும் ஹைலைன் (Highline) ஆகியவற்றுக்கு ரூ.50,000 வரையிலான தள்ளுபடி மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த சலுகையும் இல்லை.

புதிதாக மேம்படுத்தப்பட்டிருக்கும் டைகூன் எஸ்யூவி மாடலானது ரூ.11 லட்சம் முதல் ரூ.19.30 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. அப்டேட்டிற்கு முந்தைய ஃபோக்ஸ்வாகன் டைகூன் மாடலானது ரூ.10.58 லட்சம் முதல் ரூ.19.19 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பவர்ஃபுல்லான இன்ஜின் தேர்வுகள் மற்றும் பவர்ஃபுல்லான பெர்ஃபாமன்ஸைக் கொண்டிருக்கும் இந்த ஃபோக்ஸ்வாகன் டைகூன் மாடலானது மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்டு விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், மாருதி விக்டோரிஸ், ஹோண்டா எலிவேட், டாடா சியரா, ஸ்கோடா குஷாக் மற்றும் ரெனோ டஸ்டர் ஆகியவை ஃபோக்ஸ்வாகன் டைகூனுக்குப் போட்டியாக இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றன.
டைகூன் மட்டுமின்றி இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் டிகுவான் மற்றும் வெர்ட்டஸ் ஆகிய கார் மாடல்களும் இந்த ஏப்ரல் மாதம் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ப்ரீமியம் எஸ்யூவியாக ரூ.45.73 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் டிகுவானுக்கு இந்த ஏப்ரல் மாதம் ரூ.4.5 லட்சம் வரையிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் செடான் மாடலாக இருந்து வரும் ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸுக்கு இந்த ஏப்ரல் மாதம் ரூ.1.45 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் டைகூனைப் போலவே, பணத் தள்ளுபடி, எக்சேஞ்சு போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் ஆகியவை அடங்கும். இந்த செடான் மாடலானது, ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய பிற மிட்-சைஸ் செடான்களுக்குப் போட்டியாக ரூ.10.5 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தள்ளுபடி விலையில் மிட்-சைஸ் எஸ்யூவியை வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அப்டேட்டிற்கு முந்தைய டைகூன் மாடல் சிறப்பான தேர்வாகவும், அதனை வாங்குவதற்கு இது சிறப்பான நேரமாகவும் இருக்கும். விலையை விட வசதிகளும் அம்சங்களும் முக்கியம் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் புதிய டைகூன் மாடலை மேம்பட்ட அம்சங்களுடன் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








