11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர், 11 லட்ச ரூபாய் மதிப்பிலான கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை தற்போது வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

பாலிவுட் நடிகர்கள் பலர் சொகுசு கார்களையும், சக்தி வாய்ந்த பைக்குகளையும் வைத்துள்ளனர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்படக்கூடிய சொகுசு கார்களையும், செயல்திறன் மிக்க பைக்குகளையும் அடிக்கடி வாங்குவதை பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

ஆனால் நடிகர்கள் மட்டுமல்லாது, இயக்குனர்கள் பலரும் கூட, மிகவும் விலை உயர்ந்த வாகனங்களை தங்கள் கராஜில் வைத்துள்ளனர். அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் குப்தா (Sanjay Gupta). இவரது கராஜில் பல்வேறு விலை உயர்ந்த வாகனங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது பிரீமியம் மோட்டார்சைக்கிள் ஒன்று இணைந்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

இந்த பிரீமியம் மோட்டார்சைக்கிளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சஞ்சய் குப்தா வாங்கியுள்ளார். ஆக்ஸன் திரைப்படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவரான சஞ்சய் குப்தா தற்போது வாங்கியிருப்பது கவாஸாகி வெர்சிஸ் 1000 (Kawasaki Versys 1000) மோட்டார்சைக்கிள் ஆகும். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சஞ்சய் குப்தா இந்த புதிய பைக்கை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!

இந்த தகவலை சஞ்சய் குப்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ஒரு சில புகைப்படங்களையும் அவர் டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: புதிய பைக்கை வாங்குவதில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒருபோதும் மாறாது. எனது முதல் 100 சிசி ஹீரோ ஹோண்டா பைக்கை வாங்கியபோதும் நான் அதை உணர்ந்தேன் என்பதை நினைவு கூர்கிறேன்.

11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

இது கவாஸாகி வெர்சிஸ் 1000 ஆகும். இவ்வாறு சஞ்சய் குப்தா கூறியுள்ளார். ஆனால் சஞ்சய் குப்தாவிற்கு பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் ஒன்றும் புதிது கிடையாது. இதற்கு முன்பாக ஹார்லி டேவிட்சன் சூப்பர் க்ளைடு கஸ்டம், யமஹா எஃப்இஸட்1, யமஹா விமேக்ஸ் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை இந்த வெற்றிகரமான இயக்குனர் வாங்கியுள்ளார்.

11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

இதுதவிர ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களையும் கடந்த காலங்களில் அவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் குப்தா தீவிரமான பைக் ஆர்வலர் ஆவார். மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். அவரது பைக் கலெக்ஸனை பார்த்தாலே அது நமக்கு புரிந்து விடும்.

11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

கடந்த காலங்களில் தனது நண்பர்களுடன் அவர் பல முறை பைக் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் குப்தா தற்போது வாங்கியுள்ள கவாஸாகி வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிள் கடந்த மே மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 11 லட்ச ரூபாய் வருகிறது.

11 லட்ச ரூபாய்... கவாஸாகி வெர்சிஸ் 1000 பைக்கை வாங்கிய பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?

கவாஸாகி வெர்சிஸ் 1000 மோட்டார்சைக்கிளில், 1,043 சிசி இன்-லைன் நான்கு-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 102 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bollywood Director Sanjay Gupta Buys Kawasaki Versys 1000 Worth Rs.11 Lakh. Read in Tamil
Story first published: Thursday, November 19, 2020, 18:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X