இந்தியாவில் அதிசய சம்பவம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

இந்தியாவில் 9 ஆயிரம் பேரின் உயிரை கொரோனா வைரஸ் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

உலகிலேயே சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் இந்தியாவில்தான் அதிகளவில் நடக்கின்றன. ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் உயிர்களை இந்திய சாலைகள் காவு வாங்கி வருகின்றன. வாகன ஓட்டிகளின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகியவைதான், சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்வதில்லை. இந்த அலட்சியமே சாலை விபத்துக்களுக்கு அடித்தளமாக அமைகிறது. குடிபோதையில் வாகனங்களை இயக்கும் பழக்கம் இங்கு பலரிடம் காணப்படுகிறது. அதேபோல் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவதை அலட்சியப்படுத்துபவர்களும் இங்கு ஏராளம்.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

இப்படிப்பட்ட நபர்களை திருத்தி, சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அரசாங்கத்தின் இந்த எண்ணத்தை, கொரோனா வைரஸ் ஊரடங்கு நிறைவேற்றியுள்ளது. எந்தவொரு தீமைக்குள்ளும் சிறு நன்மை இருக்கும் என்பதை இது நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

ஆம், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, சாலை விபத்துக்களில் இருந்து சுமார் 9,000 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது. அதே சமயம் 26,000 பேர் சாலை விபத்துக்களில், படுகாயம் அடைவது தடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாகன போக்குவரத்து முடங்கியதே இதற்கு முக்கியமான காரணம்.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

சாலை பாதுகாப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் கமிட்டியிடம், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் ஊரடங்கு காலகட்டத்தில், அதாவது கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை, சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

இந்த மாநிலங்களில், 2019ம் ஆண்டு மார்ச் 24-மே 31 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மார்ச் 24-மே 31 காலகட்டத்தில், 8,976 பேர் குறைவாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் சுமார் 25,000 சாலை விபத்துக்கள் குறைவாக நடைபெற்றுள்ளன. அதேபோல் 26,000 பேர் குறைவாக காயமடைந்துள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு தீவிரமாக இருந்த சமயத்தில், வாகனங்களை இயக்க கடும் கட்டுப்பாடுகள் இருந்தன.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

இதன் விளைவாகவே சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்க கூடும். இருப்பதிலேயே மஹாராஷ்டிராவில்தான் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அங்கு 1,632 பேர் குறைவாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 1,171 பேர் குறைவாக உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

இந்த வரிசையில் குஜராத் 3வது இடத்தில் உள்ளது. அங்கு 900 பேர் குறைவாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பீகாரில் 898 பேரும், தெலங்கானாவில் 604 பேரும் குறைவாக உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சண்டிகர் மற்றும் டாமன்-டையூவில் சாலை விபத்து தொடர்பான மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

அதே சமயம் சதவீத அடிப்படையில் பார்த்தால், உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் சாலை விபத்து மரணங்கள் அதிகளவில் சரிவடைந்துள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் 90 சதவீதம் பேர் குறைவாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 88.7 சதவீதம் பேர் குறைவாக உயிரிழந்துள்ளனர். ஆனால் நான்கு முக்கியமான மாநிலங்கள் இந்த காலகட்டத்திற்கான தரவுகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

உத்தர பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகியவைதான் அந்த நான்கு மாநிலங்கள். அதேபோல் டெல்லியும் இன்னும் தகவல்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன.

இந்தியாவில் நடந்த அதிசயம்... 9 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றிய கொரோனா வைரஸ்... எப்படினு தெரியுமா?

இந்த சூழலில், கொரோனா வைரஸ் ஊரடங்கால், சாலை விபத்து தொடர்பான மரணங்கள் குறைந்துள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை முடிவுக்கு வந்தால், வாகன போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போது வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே சாலை விபத்து மரணங்களை இன்னும் வெகுவாக குறைக்க முடியும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Coronavirus Lockdown Saved 8,976 Lives On Roads. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X