4 லட்சம் கிலோ எடை கொண்ட ரயிலை சர்வ சாதாரணமா இழுத்த கார்! அந்த நிறுவன தயாரிப்பா! ஃபார்ச்சூனர் சோலி முடின்ச்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor). இந்த நிறுவனம் கூடிய விரைவில் புத்தம் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) கார் ஆகும்.

ஃபுல் சைஸ் எஸ்யூவி (Full Size SUV) ரகத்தை சேர்ந்த எம்ஜி மெஜஸ்டர் கார், டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களுடன் போட்டியிடவுள்ளது. இந்த சூழலில் எம்ஜி மெஜஸ்டர் கார் ஒன்று தற்போது கின்னஸ் உலக சாதனை (Guinness World Record) ஒன்றை படைத்துள்ளது.

406 Tonne Train Pulled By MG Majestor SUV

406.4 டன் எடை கொண்ட ரயிலை இழுத்திருப்பதுதான் அந்த சாதனை ஆகும். அதாவது 4,06,400 கிலோ எடை கொண்ட ஒரு ரயிலை எம்ஜி மெஜஸ்டர் கார் இழுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள காக்கபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கு இடைப்பட்ட தண்டவாளத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின்படி பார்த்தால், 4,06,400 கிலோ எடை கொண்ட ரயிலை எம்ஜி மெஜஸ்டர் கார் 300 அடி தூரத்திற்கு இழுத்து சென்றுள்ளது. முன்னதாக கின்னஸ் உலக சாதனை நிறுவனம் 400 டன், அதாவது 4 லட்சம் கிலோ எடை கொண்ட ரயிலை, வெறும் 100 அடி தூரத்திற்கு இழுத்து சென்றாலே சாதனைதான் என நிர்ணயம் செய்திருந்தது.

MG Majestor SUV

ஆனால் எம்ஜி மெஜஸ்டர் காரை அதை எல்லாம் கடந்து, 4,06,400 கிலோ எடை கொண்ட ரயிலை, 300 அடி தூரத்திற்கு இழுத்து சென்று கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை முயற்சியில் பயன்படுத்தப்பட்ட எம்ஜி மெஜஸ்டர் காரின் இன்ஜின் மற்றும் ட்ராக்ஸன் சிஸ்டம் போன்ற அமைப்புகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள அதே கார்தான், அப்படியே எந்தவொரு மாற்றமும் செய்யப்படாமல், இந்த சோதனை முயற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எம்ஜி மெஜஸ்டர் காரில், 2.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 215.5 பிஎஸ் பவர் மற்றும் 478.5 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எம்ஜி மெஜஸ்டர் காரில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driving Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற அதிநவீன வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எம்ஜி மெஜஸ்டர் கார், ஏராளமான ஆஃப் ரோடு சாகச திறன்களையும் கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள எம்ஜி மெஜஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை சுமார் 40 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். நடப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள்ளாகவே எம்ஜி மெஜஸ்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 13:00 [IST]
English summary
406 tonne train pulled by mg majestor suv guinness world record all details
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+