மாருதி எர்டிகாவை விட 1 லட்சம் குறைவான விலை! 9 பேர் சொகுசா போக முடியும்! மார்க்கெட்ட கதிகலங்க வைத்த இந்திய கார்
இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய கார்களுக்கு எப்போதுமே நல்ல 'டிமாண்ட்' இருந்து வருகிறது. டொயோட்டா குவாலிஸ் (Toyota Qualis), டொயோட்டா இன்னோவா (Toyota Innova) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற கார்களின் பிரம்மாண்டமான வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.
இந்த வரிசையில் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) காரின் மிக பிரம்மாண்டமான வெற்றிக்கு பின்னாலும் இந்த காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா பொலிரோ கார் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா பொலிரோ நியோ (Mahindra Bolero Neo) மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் (Mahindra Bolero Neo Plus) ஆகியவை ஆகும். இதில், மஹிந்திரா பொலிரோ மற்றும் மஹிந்திரா பொலிரோ நியோ ஆகிய 2 வெர்ஷன்களும் 7 சீட்டர் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் வெர்ஷனானது, 9 சீட்டர் ஆப்ஷனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த வெர்ஷனில் 5 சீட்டர் ஆப்ஷனில் ஆம்புலன்ஸ் வேரியண்ட் ஒன்றும் விற்பனையாகி கொண்டுள்ளது. அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்றாலும் கூட, மஹிந்திரா பொலிரோ ஓரளவிற்கு குறைவான விலையில்தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா பொலிரோ வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது 7 சீட்டர் காரான மாருதி சுஸுகி எர்டிகாவை விட சுமார் 1 லட்ச ரூபாய் குறைவு ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோவின் டாப் வேரியண்ட்டின் விலை 9.90 லட்ச ரூபாயாக உள்ளது.
இந்த வரிசையில் மஹிந்திரா பொலிரோ நியோ வெர்ஷனானது 8.85 - 10.49 லட்ச ரூபாய் என்ற விலையிலும், மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் வெர்ஷனானது 10.99 - 13.09 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே மஹிந்திரா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
அதிகம் பேர் பயணம் செய்ய முடியும், சரியான விலை நிர்ணயம் ஆகிய சிறப்பம்சங்கள் உடன், சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷனையும் (Engine Option), மஹிந்திரா பொலிரோ கொண்டுள்ளது. மஹிந்திரா பொலிரோ மற்றும் மஹிந்திரா நியோ ஆகிய 2 வெர்ஷன்களிலும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் வெர்ஷனில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் எதிர்பார்க்கும் பல்வேறு வசதிகளையும் மஹிந்திரா பொலிரோ காரின் 3 வெர்ஷன்களும் கொண்டுள்ளன. இதன் காரணமாகவே சுமார் கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்னரும் கூட (லான்ச் செய்யப்பட்ட வருடம் 2000) தற்போதும் மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
மஹிந்திரா பொலிரோ காரின் கடந்த 2025-26ம் நிதியாண்டிற்கான (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31) சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த 2025-26ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக (3 வெர்ஷன்களும் சேர்த்து) 1,10,136 மஹிந்திரா பொலிரோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2024-25ம் நிதியாண்டில் (2024 ஏப்ரல் 1 - 2025 மார்ச் 31) ஒட்டுமொத்தமாக வெறும் 94,750 மஹிந்திரா பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 2024-25 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2025-26 நிதியாண்டில் 15,386 மஹிந்திரா பொலிரோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 16.2 சதவீத வளர்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் மேலே சொன்ன சிறப்பம்சங்கள் உடன், நல்ல க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் வலிமையான கட்டுமான தரத்துடன் ஒரு காரை வாங்க வேண்டும் என விரும்பினால், மஹிந்திரா பொலிரோ உங்களுக்கு மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








