அசத்தலான க்ரூஸர் சைக்கிள் மாடல்கள்... லோக்கல் மோட்டார்ஸ் அறிமுகம்!

Posted By:

அசத்தலான 2 புதிய சைக்கிள் மாடல்களை லோக்கல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த சைக்கிளில் மின் மோட்டார் அல்லது பெட்ரோல் எஞ்சினையும் பொருத்தி பெற்றுக்கொள்ளளாம்.

சற்று நீண்ட தூரம் சென்று வர ஏதுவான க்ரூஸர் வகையை சேர்ந்த சைக்கிள் மாடல்கள் இவை. இந்த புதிய சைக்கிள் மாடல்களை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எலக்ட்ரிக் மாடல்

எலக்ட்ரிக் மாடல்

மின் மோட்டார் பொருத்தப்பட்ட மாடல் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 32 கிமீ தூரம் செல்லும். கூடுதல் பேட்டரியை பொருத்திக் கொண்டால், அதிகபட்சமாக 64 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

மின்மோட்டார்

மின்மோட்டார்

இந்த சைக்கிளில் 500W டிசி மின் பிரஷ்லெஸ் மின்மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புற சக்கரத்துடன் இந்த மின்மோட்டார் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த சைக்கிளில் பிரேக் பிடிக்கும்போது மின் ஆற்றலை உற்பத்தி செய்து பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது. இதன்மூலம், கூடுதல் சேமிப்பை வழங்கும்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் ஹோண்டாவின் ஜிஎக்ஸ்எச்50 49சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை பெட்ரோல் நிரப்பினால், 112 கிமீ தூரம் செல்ல முடியும். ஒரு கேலனுக்கு 241 கிமீ மைலேஜ் தரக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்போக்கிக் குழாய்

புகைப்போக்கிக் குழாய்

அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் செல்லும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் புகைப்போக்கி குழாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உறுதியான ஃப்ரேம்

உறுதியான ஃப்ரேம்

இதன் மெயின் ஃப்ரம் மற்றும் புகைப்போக்கிக் குழாய் ஆகியவை உயர்தர 4130 க்ரோமிலி என்ற மாலிபிடினம் மற்றும் குரோம் ஆகியவற்றின் கலப்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்டது. இவை கைகளால் மிகவும் நுணுக்கமாக வெல்டிங் செய்யப்பட்டிருக்கிறது. உயர்தர லெதர் பைகள் மற்றும் இருக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

 இரண்டு மாடல்கள்

இரண்டு மாடல்கள்

வாடிக்கையாளர்கள் உயரத்திற்கு தகுந்தாற்போல் இரு மாடல்களில் கிடைக்கும். அதாவது, 5'7" உயரம் கொண்டவர்களுக்கு நடுத்தர மாடலும், அதற்கு மேல் உயரமுடையவர்கள் பெரிய அளவு மாடலையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

 
English summary
Local Motors has come up with two very clever bicycle designs that is very modern but has that vintage DNA well rooted.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark