மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

முதல் நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதாகட்டும் அல்லது வேலைக்கு செல்வதாகட்டும், அந்த நினைவுகள் எப்போதும் நம்மை விட்டு நீங்காது. முதல் முறையாக செய்யக்கூடிய விஷயங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்து விடுவதே இதற்கு காரணம். இதில், முதல் முறையாக கார் ஓட்டுவதும் அடங்கும். இந்த வகையில் இளம்பெண் ஒருவர் முதல் முறையாக கார் ஓட்டும்போது வித்தியாசமான அனுபவத்தை பெற்றுள்ளார்.

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

அந்த பெண் முதல் முறையாக கார் ஓட்டும்போது, அவரது தந்தை க்ராஷ் டெஸ்ட் டம்மிகளை போல் உடை அணிந்து வந்து அமர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது. ஓட்டுனர் இருக்கையில் அந்த பெண் அமர்ந்திருக்க, அருகில் உள்ள கோ-பாசஞ்சர் இருக்கையில், அந்த பெண்ணின் தந்தை வந்து அமர்கிறார்.

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

அப்போது அவர் க்ராஷ் டெஸ்ட்களில் பயன்படுத்தப்படும் டம்மிகளை போல் உடையணிந்துள்ளார். கார்களை பல்வேறு அமைப்புகள் க்ராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதன் மூலம் அந்த கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பது கண்டறியப்படுகிறது. இந்த சோதனையில், காரை அதிவேகமாக மோத செய்து அதன் பாதுகாப்பு தரத்தை கண்டறிவார்கள்.

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

அப்போது கார்களுக்கு உள்ளே மனிதர்களை போன்ற டம்மிகள் வைக்கப்படும். இதன் மூலம் டம்மிகளுக்கு எங்கே அடிபடுகிறது என்பதை கண்டறிந்து, அதனை அடிப்படையாக வைத்து காரின் பாதுகாப்பு மதிப்பு கண்டறியப்படும். அப்படி க்ராஷ் டெஸ்ட்களில் பயன்படுத்தப்படும் டம்மிகளை போன்றுதான் அந்த இளம்பெண்ணின் தந்தை உடையணிந்திருந்தார்.

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ நகைச்சுவையாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மற்றொரு புகாரையும் இந்த வீடியோ கிளப்பியுள்ளது. இது போன்று நடந்து கொண்டதற்காக தனது மகளிடம், அந்த தந்தை மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஒரு சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

அந்த தந்தையின் இந்த செயல்பாடு அவரது மகளுடைய நம்பிக்கையை குலைத்து விடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். அத்துடன் தனது மகளின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் அவரது தந்தை ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் சமூக வலை தளங்கள் மூலமாக வலியுறுத்தி கொண்டுள்ளனர். இது போன்ற காரணங்களால் நெட்டிசன்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

மகள் முதல் முறையாக கார் ஓட்டும்போது தந்தை செய்த காரியம்... வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

சிலர் இந்த வீடியோவை வெறும் நகைச்சுவையாகவும், சிலர் இந்த வீடியோவை அந்த இளம்பெண்ணின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விஷயமாகவும் பார்க்கின்றனர். எப்படியாயினும் சமூக வலை தளங்கள் அனைத்திலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

க்ராஷ் டெஸ்ட்களை பொறுத்தவரை குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து பெறும் ரேட்டிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய மூன்று மேட் இன் இந்தியா கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dad Dresses Up As Crash Test Dummy For Daughter's First Drive: Watch Viral Video Here. Read in Tamil
Story first published: Wednesday, June 2, 2021, 17:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X