டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

12 ஆண்டுகளுக்கு முன் டோனி செய்த ஒரு காரியம் குறித்த தகவல் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோனி, அழுத்தமான சூழ்நிலைகளிலும் கூட மிகவும் சாந்தமாக இருக்க கூடியவர். இந்த குணம் அவருக்கு இயற்கையாகவே வந்து விட்டது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை பலமுறை சிக்கல்களில் இருந்து மீட்டு எடுத்துள்ளார். பெரிய போட்டி என்றாலும், பரபரப்பான சூழல் என்றாலும் டோனியின் முகத்தில் எந்த சலனமும் இருக்காது.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லியின் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு நேர் எதிராக சாந்த சொரூபியாக காணப்படுபவர் டோனி. இந்திய கிரிக்கெட் அணி பல உச்சங்களை எட்டி பிடித்ததற்கு டோனியின் இந்த அமைதியான அணுகுமுறைதான் மிக முக்கியமான காரணம். இதற்காகவே டோனியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

இப்படிப்பட்ட ஒரு மனிதர் கிரிக்கெட் களத்திற்கு வெளியே எப்படி இருப்பார்? என்பதை அறிந்து கொள்ளும் ஆவல், அவரது ரசிகர்களுக்கு எப்போதுமே இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்றுள்ளதால், அவரைப்பற்றிய அரிய தகவல்கள், ரசிகர்களுக்கு தற்போது கிடைத்து வருகின்றன.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, டோனி திடீரென அறிவித்தார். கிரிக்கெட் களத்தில் டோனியின் பிரிவை ஏற்று கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். அதே சமயம் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், பிரபலங்களும், டோனி பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

இந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஸ்மன், டோனி பற்றிய ருசிகரமான தகவல் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்தை, மைதானத்தில் இருந்து ஹோட்டல் வரை டோனி ஓட்டி சென்ற பழைய நினைவை விவிஎஸ் லக்ஸ்மன் பகிர்ந்துள்ளார்.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

இந்த ருசிகரமான சம்பவம் நாக்பூரில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விவிஎஸ் லக்ஸ்மன் கூறுகையில், ''அந்த சமயத்தில் டோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். ஏனெனில் அப்போதுதான் அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றிருந்தார். போட்டி முடிந்த பிறகு வீரர்கள் அனைவரும் அணி பேருந்தில் ஹோட்டலுக்கு செல்ல தயாராக இருந்தோம்.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

அப்போது அணி பேருந்தின் ஓட்டுனரை பின்னால் சென்று அமரும்படி டோனி கூறினார். பின்பு மைதானத்தில் இருந்து ஹோட்டல் வரை டோனியே பேருந்தை ஓட்டி சென்றார். இந்திய அணியின் கேப்டன், அணி பேருந்தை ஓட்டுகிறாரா? என்பதை பார்த்து நாங்கள் பிரம்மித்து போய் விட்டோம்'' என்றார். தன் வழக்கமான பாணியில் டோனி கூலாக பேருந்தை ஓட்டியிருந்தாலும், வீரர்கள் அதிர்ச்சியில் சற்று கலக்கமும் அடைந்திருக்கலாம்!!

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரின் மூன்றாவது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியுடன் இந்திய அணியின் கேப்டனாக இருந்த அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றார்.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

அதன் பின்னர் நாக்பூரில் நடைபெற்ற 4வது மற்றும் கடைசி போட்டியில் டோனி கேப்டனாக இருந்தார். அந்த சமயத்தில்தான் விவிஎஸ் லக்ஸ்மன் கூறிய மேற்கண்ட நிகழ்வு நடந்துள்ளது. கிரிக்கெட்டிற்கு நிகராக வாகனங்களையும் டோனி அதிகமாக நேசிக்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

சென்னை மற்றும் ராஞ்சி நகர சாலைகளில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை டோனி ஓட்டி வருவதை பல முறை பார்க்க முடிந்துள்ளது. மிகவும் அரிதான மற்றும் விலை உயர்ந்த கார்கள் பலவற்றை மஹேந்திர சிங் டோனி வைத்துள்ளார். இதில், ஹம்மர் ஹெச்2, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் 1, மிட்சுபிஷி பஜீரோ எஸ்எஃப்எக்ஸ், ஃபெராரி 599 ஜிடிஓ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

அதே சமயம் இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்14ஆர், கான்ஃபெடரேட் ஹெல்கேட் எக்ஸ்132 ஆகியவை முக்கியமானவை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்று விட்டாலும், அரிய வாகனங்களை சேகரிக்கும் அவரது ஆர்வம் குறைந்து விடவில்லை. அவரது கராஜிற்கு சமீபத்தில் வந்துள்ள ஒரு கார் அதற்கு ஒரு உதாரணம்.

டோனி செய்த காரியத்தால் உறைந்து போன இந்திய அணி வீரர்கள்... 12 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ரகசியம்...

மிகவும் அரிய விண்டேஜ் காரான போன்டியாக் ஃபயர்பேர்டு (Pontiac Firebird) காரை டோனி தற்போது சொந்தமாக்கியுள்ளார். டோனியை இனிமேல் இந்திய அணியின் நில நிற சீருடையில் பார்க்க முடியாது என்றாலும், இதுபோன்ற அரிய வாகனங்களுடன் பொது சாலைகளில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Dhoni Drove Team Bus During 2008 Test Series Against Australia - VVS Laxman. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X