இந்த காரின் விலை வெறும் 6 லட்சம்தானா! இனி மாருதி, டாடாலாம் அவ்ளோதான்!
இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Meter Compact SUV) ரகத்தை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.
எனவே பிரான்ஸை (France) சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் இந்த செக்மெண்ட்டில் ஒரு காரை விற்பனை செய்து வருகிறது. அது ரெனால்ட் கைகர் (Renault Kiger) ஆகும். ஆனால் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இந்த செக்மெண்ட்டில் புதிதாக மேலும் ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ரெனால்ட் நிறுவனம் தயாராகி வருகிறது.

அது ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger) ஆகும். ரெனால்ட் பிரிட்ஜர் கான்செப்ட் வெகு சமீபத்தில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இதை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் பணிகளில் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் ரெனால்ட் பிரிட்ஜர் கார் குறித்த புதிய தகவல்கள் தற்போது நமக்கு தெரிய வந்துள்ளன.
அதாவது ரெனால்ட் பிரிட்ஜர் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டுள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான், ரெனால்ட் பிரிட்ஜர் காரிலும் வழங்கப்படும் என முதலில் தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்களின்படி பார்த்தால், ரெனால்ட் கைகர் காரின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், ரெனால்ட் பிரிட்ஜர் காரில் வழங்கப்படாது. அதற்கு பதிலாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் இந்த காரில் கொடுக்கப்படவுள்ளது. ரெனால்ட் பிரிட்ஜர் கார் ஆரம்பத்தில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டும்தான் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் இதன் ஹைப்ரிட் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. ரெனால்ட் பிரிட்ஜர் காரின் ஹைப்ரிட் வெர்ஷன் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான ஹைப்ரிட் கார்களில் ஒன்றாக இருக்கலாம். அதே போல் ரெனால்ட் பிரிட்ஜர் இவி எலெக்ட்ரிக் கார்தான், இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் சர்வதேச சந்தைகளில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் இந்திய சந்தையில் அதன் ஒரு எலெக்ட்ரிக் கார் கூட இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. முன்னதாக ரெனால்ட் க்விட் (Renault Kwid) காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன.
அத்துடன் இதுதான் இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாக வரும் தகவல்களின்படி பார்த்தால், ரெனால்ட் பிரிட்ஜர் இவிதான் இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் பிரிட்ஜர் கான்செப்ட் மாடலின் புகைப்படங்களை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டபோதே, அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டது. இந்த சூழலில்தான் அதன் இன்ஜின் ஆப்ஷன் உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளியாகி இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.
அனேகமாக ரெனால்ட் பிரிட்ஜர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6 அல்லது 7 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலையில் வந்தால், போட்டி மாடல்களுக்கு ரெனால்ட் பிரிட்ஜர் விற்பனையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நாங்கள் இந்த செய்தியின் முதல் பத்தியில் கூறியுள்ள கார்கள் மட்டுமல்லாது, ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), நிஸான் மேக்னைட் (Nissan Magnite), டாடா பன்ச் (Tata Punch) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) போன்ற கார்களுக்கும், ரெனால்ட் பிரிட்ஜர் விற்பனையில் மிக கடுமையான சவாலை ஏற்படுத்தும். அனேகமாக ரெனால்ட் பிரிட்ஜர் கார் அடுத்த ஆண்டு (2027) விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








