35 கிமீ மைலேஜ் தரும் காரை வெறும் 5 லட்சத்துக்கு களமிறக்க போகும் மாருதி! டாடா, ஹூண்டாய்க்கு நேரம் சரியில்ல!
இந்தியாவின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் கூட, மாருதி சுஸுகியின் ஒரு சில கார்களும் விற்பனையில் தடுமாறி கொண்டுதான் உள்ளன. இதற்கு மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) ஒரு உதாரணம். மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விற்பனை மிக நீண்ட காலமாகவே மிகவும் மந்தமாகதான் இருந்து வருகிறது.
எனவே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது இக்னிஸ் காரின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கார் குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சந்தை பங்கு (Market Share) 20 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரித்து கொள்ள வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புகிறது. அத்துடன் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட்டில் டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய கார்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கண்களை உறுத்த தொடங்கியுள்ளது.
எனவே டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்த கார் ஒய்43 (Y43) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, புதிய பெயர் சூட்டப்படும். மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்து செய்யவுள்ள மிகப்பெரிய லான்ச் ஆக ஒய்எம்சி (YMC) கருதப்படுகிறது. இதுவும் ஒரு குறியீட்டு பெயர்தான். மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து வரவுள்ள எலெக்ட்ரிக் எம்பிவி ரக காருக்கு தற்போது இந்த குறியீட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் எம்பிவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பிறகு, மைக்ரோ எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ இந்த மைக்ரோ எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு வந்து விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரில் Z12E 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் 80 ஹெச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கும்.
இதே இன்ஜினின் சிஎன்ஜி வேரியண்ட்டும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் வழங்கப்படவுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது பவர் அவுட்புட் 69 ஹெச்பி மற்றும் 102 என்எம் ஆக குறைந்து விடும். இது குறித்து கார்வாலே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிஎன்ஜி வேரியண்ட்டின் மைலேஜ் (Mileage) மிகவும் சிறப்பாக இருக்கும்.
அனேகமாக சிஎன்ஜி வேரியண்ட்டின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 30-35 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகளை (Features) எல்லாம் இந்த மைக்ரோ எஸ்யூவி கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் இந்த காரின் நீளம் 3.8 மீட்டர்கள் என்ற அளவிலும், அகலம் 1.7 மீட்டர்கள் என்ற அளவிலும், உயரம் 1.6 மீட்டர்கள் என்ற அளவிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் இதன் வீல் பேஸ் நீளம் 2.5 மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய மைக்ரோ எஸ்யூவி ரக காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.25 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.


Click it and Unblock the Notifications








