சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது...

மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தந்தை ஒருவர், மினியேச்சர் விண்டேஜ் காரை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது...

மகளின் கனவை நிறைவேற்றுவதுதான் ஒரு தந்தை விரும்ப கூடிய விஷயமாக இருக்கும். இந்த வகையில் மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் கார் மெக்கானிக்காக இருக்கும் ஜாவேத் ஷேக் என்பவர் தனது மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தற்போது செய்துள்ள ஒரு காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது...

அவரது மகள் டான்ஜிலா ஒரு முறை ஷாப்பிங் மாலில், சிகப்பு நிற விண்டேஜ் பொம்மை காரை பார்த்துள்ளார். உடனடியாக அந்த கார் தனக்கு வேண்டும் என அவர் அடம்பிடிக்க தொடங்கி விட்டார். எனவே அந்த பொம்மை காரின் விலை எவ்வளவு? என கேட்டுள்ளனர். இதற்கு விற்பனையாளர் 60 ஆயிரம் ரூபாய் என பதில் அளித்துள்ளார். அத்துடன் இது சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது...

ஒரு சீன தயாரிப்பிற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட ஜாவேத் ஷேக் விரும்பவில்லை. எனவே அந்த பொம்மை காரை வாங்காமல், ஜாவேத் ஷேக்கின் குடும்பத்தினர் வீடு திரும்பி விட்டனர். ஆனால் தனது தாத்தா ஹசன் ஷேக்கிடம், அந்த பொம்மை கார் குறித்து டான்ஜிலா தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்துள்ளார்.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 ரிவியூ... ப்ளஸ் என்ன? மைனஸ் என்ன? விரிவாக அலசும் வீடியோ!

எனவே தங்களுடைய கராஜில் தாங்களாகவே ஒரு காரை உருவாக்கி விடுவது என ஜாவேத் ஷேக்கும், ஹசன் ஷேக்கும் முடிவு செய்தனர். இதன் விளைவாக மினியேச்சர் விண்டேஜ் கார் ஒன்று தற்போது உருவாகியுள்ளது. மெக்கானிக்காக இருப்பதால், இந்த விஷயத்தில் ஜாவேத் ஷேக்கிற்கு நல்ல அனுபவம் இருந்துள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சம் உள்ளது.

சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது...

சீனாவில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு பாகத்தையும் இந்த காரில் பயன்படுத்த கூடாது என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து ஹசன் ஷேக் கூறுகையில், ''மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளை விட, இந்திய தயாரிப்புகள் வலுவானவை. எனவே புதிதாக ஒன்றை வாங்குவதை விட, எனது பேத்திக்காக நாங்களே வலுவான ஒரு காரை உருவாக்க முடியும் என நினைத்தோம்'' என்றார்.

சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது...

ஊரடங்கு அமலுக்கு வந்த சமயத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. டான்ஜிலாவின் ஆசையை நிறைவேற்ற ஜாவேத் ஷேக்கிற்கும், ஹசன் ஷேக்கிற்கும் சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ளன. ஷாப்பிங் மாலில் டான்ஜிலா பார்த்த பொம்மை காரை போலவே, இந்த மினியேச்சர் காரும் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

சீன தயாரிப்பு வேண்டாம்... மகளின் ஆசைக்காக குட்டி விண்டேஜ் காரை உருவாக்கிய தந்தை... சூப்பரா ஓடுது...

150 கிலோ வரையிலான எடையை சுமந்து செல்லும் திறனை இந்த கார் பெற்றுள்ளது. எனவே பெரியவர்கள் கூட இந்த சிறிய காரில் சவாரி செய்ய முடியும். ஒரு ஸ்கூட்டரின் பெட்ரோல் இன்ஜினை இந்த மினியேச்சர் காரில் பயன்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்த காரில் கியர்கள் இல்லை. எனவே ஜாவேத் ஷேக்கின் மகள் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கும்.

இந்த காரை டான்ஜிலாவிடம் காட்டியபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். அத்துடன் தனது தோழிகளையும் அழைத்து கொண்டு இந்த காரில் சவாரி செய்துள்ளார். இந்த காரை அப்பகுதி மக்களும், சாலையில் செல்பவர்களும் தற்போது ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். EWOKE TV என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Father Builds A Vintage Car For His Daughter - Video. Read in Tamil
Story first published: Thursday, November 19, 2020, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X