கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, சூப்பரான டெக்னாலஜி ஒன்றை போக்குவரத்து துறை கையில் எடுத்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுக்கும் நோக்கில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் முழு பொது முடக்கத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் இருந்து பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என அனைத்து வகையான பொது போக்குவரத்து வாகனங்களின் சேவைகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

தனியார் கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி இயக்கப்பட்ட பல லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

எனினும் தற்போது நிலைமை மாறி விட்டது. கொரோனா வேகம் எடுத்து வரும் நிலையிலும், பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு விட்டன. இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கும் மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பஸ், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இயங்குகின்றன.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதற்கு பதிலாக சொந்த கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

எனினும் வேறு வழியில்லை என்னும் நிலையில், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏராளமானோருக்கு இருக்கவே செய்கிறது. அவர்களுக்காக பொது போக்குவரத்து வாகனங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

இதன் ஒரு பகுதியாக ஆட்டோ, டாக்ஸி ஆகிய வாகனங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. டிரைவர் மற்றும் மற்ற பயணிகளிடம் இருந்து இந்த பிளாஸ்டிக் கவர்கள் ஒருவரை தனிமைப்படுத்துகின்றன. இந்த சூழலில், கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக உத்தர பிரதேச மாநிலத்தில் அதிரடி தொழில்நுட்பம் ஒன்று பயன்படுத்தப்படவுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

லக்னோ நகரில் உள்ள பஸ் டெப்போக்களின் ஏசி காத்திருப்பு அறைகளில் கோவிட்கோட் தொழில்நுட்பத்தை (Covidcoat Technology) பயன்படுத்துவதற்கு, உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் (Uttar Pradesh State Road Transport Corporation - UPSRTC) தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

அதாவது மேற்பரப்புகளில் நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் கோட்டிங் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு இலவசமாக சோதனை அடிப்படையில் இது செயல்படுத்தப்படும். இத்திட்டம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டால், மற்ற பஸ் டெப்போக்களிலும் பயன்படுத்தப்படும் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா பரவுவதை தடுக்க அதிரடி... சூப்பர் டெக்னாலஜியை கையில் எடுத்து மாஸ் காட்டும் போக்குவரத்து துறை

இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படும்? என்ற விளக்கத்தை, தனியார் நிறுவனம் ஒன்று அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. இரும்பு, பிளாஸ்டிக், ஜவுளி, பர்னிச்சர் மற்றும் லேப்டாப்கள் ஆகியவற்றின் மேற்பரப்புகளில், நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் கோட்டிங் செய்வது, தொற்றுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் ஒப்பு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Fight Against Coronavirus: UPSRTC To Use Antimicrobial Coating Technology. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X