Just In
- 3 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 5 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 8 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜனவரி 1 முதல் பாஸ்டேக் கட்டாயம்... இரு மடங்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு... என்னனு தெரியுமா?
வரும் ஜனவரி 1 முதல் சுங்க சாவடிகளில் பணபரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. பாஸ்டேக் இல்லாதவர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்துவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் ஏற்படும் நேர விரயம் மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளை களைவதற்காகவும், கடந்த ஒரு ஆண்டு காலமாகவே, பாஸ்டேக் பயன்பாட்டை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஊக்குவித்து வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பாஸ்டேக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. அத்துடன் சுங்க சாவடிகளில் பணபரிவர்த்தனை குறைந்து, பாஸ்டேக் மூலமான பரிவர்த்தனை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் சுங்க சாவடிகளின் மொத்த வருவாயில், சுமார் 75 சதவீதம், பாஸ்டேக் மூலமாக வசூல் செய்யப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்த சூழலில், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாகவுள்ளது. எனவே தற்போது பணபரிவர்த்தனை நடக்கும் அனைத்து லேன்களும், வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து, பாஸ்டேக் லேன்களாக மாற்றம் செய்யப்பட்டு விடும். இதன் காரணமாக புத்தாண்டு முதல் சுங்க சாவடிகளில் பணபரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது.

வாகன ஓட்டிகளுக்கு இதனை தெரிவிக்கும் வகையில், சுங்க சாவடிகளில் தற்போதே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு விட்டன. பணபரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது என்னும் நிலையில், சுங்க சாவடிகளில் ப்ரீ-பெய்டு கார்டுகள் (Pre-paid Cards) அறிமுகம் செய்யப்படவுள்ளன. சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அனைத்து ஹைப்ரிட் லேன்களிலும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல், ப்ரீ-பெய்டு கார்டு வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''வரும் ஜனவரி 1 முதல் சுங்கசாவடிகளில் பணபரிவர்த்தனைகள் இருக்காது. அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாகதான் இருக்கும். எனவே பாஸ்டேக் இல்லாதவர்கள் இரு மடங்கு சுங்க கட்டணத்தை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். எனினும் இந்த ப்ரீ-பெய்டு கார்டுகள், பணபரிவர்த்தனைக்கு மாற்றாக செயல்படும்.

வாகனங்களின் முன் பகுதியில் பாஸ்டேக் ஒட்டாமல் வருபவர்கள், சுங்க சாவடிகளில் இந்த ப்ரீ-பெய்டு கார்டுகளை வாங்கி கொள்ள முடியும். பாஸ்டேக்கிற்கு பதிலாக இந்த ப்ரீ-பெய்டு கார்டுகளை பயன்படுத்தினால், அவர்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அத்துடன் பாஸ்டேக் பயனர்கள், தங்கள் டேக்கிற்கு ரீசார்ஜ் செய்ய மறந்து விட்டாலோ அல்லது அவர்களின் டேக் பிளாக்லிஸ்ட் ஆகியிருந்தாலோ கூட, இந்த ப்ரீ-பெய்டு கார்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ப்ரீ-பெய்டு கார்டுகளை வாங்கிய பிறகு, அதற்கு நெட் பேங்கிங் உள்ளிட்ட வழிகளில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்'' என்றனர். இந்த ப்ரீ-பெய்டு கார்டுகளை வாகன ஓட்டிகள் வாங்குவதற்கும், ரீசார்ஜ் செய்து கொள்வதற்கும் தேவையான வசதிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஒவ்வொரு சுங்க சாவடியிலும் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலமாக சுங்க சாவடி கட்டண பரிவர்த்தனைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாகும். பாஸ்டேக் கட்டாயம் செய்யப்படும் ஜனவரி 1ம் தேதிக்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால், தங்கள் வாகனங்களுக்கு பாஸ்டேக் வாங்குவதில் வாகன உரிமையாளர்கள் பலர் தற்போது தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
Note: Images used are for representational purpose only.