Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Finance
கையை நீட்டினால் போதும்.. அமேசானின் புதிய பேமெண்ட் முறை..!
- News
இப்போது இந்தியா பெயரை கேட்டாலே.. பதறியடித்து ஓடும் உலக நாடுகள்.. என்ன காரணம் தெரியுமா?
- Lifestyle
சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விமானம் டேக்-ஆஃப், லேண்ட் ஆகும்போது ஏன் லைட்களை ஆஃப் பண்றாங்க தெரியுமா? இந்த ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டாங்க
விமானங்கள் டேக்-ஆஃப் ஆகும்போதும் மற்றும் லேண்ட் ஆகும்போதும் ஏன் கேபினில் லைட்களை அணைக்கின்றனர்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் விளக்கமாக பார்க்கலாம்.

விமானங்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக ஏராளமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி சீட் பெல்ட் அணிவது போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் ஏன் பின்பற்றப்படுகின்றன? என்ற சந்தேகத்திற்கு நம்மில் பலருக்கும் பதில் தெரியும். ஆனால் இன்னும் ஒரு சில விதிமுறைகளை நீங்கள் மேலோட்டமாக பார்த்தால், அவை தேவையில்லாதது போல் தோன்றலாம்.

ஆனால் அந்த விதிமுறைகளுக்கு பின்னால் ஏராளமான காரணங்கள் இருக்கும். விமானங்கள் டேக்-ஆஃப் ஆகும்போதும், லேண்டிங் ஆகும்போதும் கேபின் லைட்கள் 'டிம்' செய்வது அப்படிப்பட்ட விதிமுறைகளில் ஒன்றாகும். இந்த விதிமுறை ஏன் மிகவும் முக்கியமானது? என்பதற்கான விளக்கத்தை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

டேக்ஆஃப் ஆகும்போதும் மற்றும் லேண்டிங் செய்யப்படும்போதும் விமானங்களின் லைட்களை ஆஃப் செய்ய வேண்டிய தேவை தற்போது விமான நிறுவனங்களுக்கு உள்ளது. ஒளியில்லாத இருண்ட சூழலுக்கு நமது கண்கள் அட்ஜெஸ்ட் ஆக வேண்டும் என்பதற்காகதான், விமானங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.

பொதுவாக இருள் சூழ்ந்த சூழ்நிலைக்கு நமது கண்கள் அட்ஜெஸ்ட் ஆக 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். எனவே எதிர்பாராதவிதமாக அவசர சூழல் ஏற்பட்டால், பயணிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு, சில நிமிடங்கள் விளக்குகளை அணைப்பது உதவி செய்யும். இதுகுறித்த சரியான விளக்கத்தை பைலட்கள் வழங்கியுள்ளார்கள்.

''விமான பயணத்திலேயே டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்தான் மிகவும் அபாயகரமான கட்டம். இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழும்பட்சத்தில், லைட்களை அணைக்கும் விதிமுறை பயணிகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவி செய்யும்.

இன்னும் தெளிவாக கூறுவதென்றால், டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங்கின்போது ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு கேபினில் இருள் சூழ்ந்து விடும். அப்போது உங்கள் கண்கள் இருள் சூழ்ந்த சூழ்நிலைக்கு அட்ஜெஸ்ட் ஆகி இருக்காது. ஆனால் லைட்களை அணைக்கும் விதிமுறையால், திடீரென இருளை எதிர்கொள்ளும் சூழல் பயணிகளுக்கு ஏற்படாது.

ஏனெனில் லைட்களை முன்கூட்டியே அணைத்து விடுவதன் காரணமாக, அவர்களுடைய கண்கள் ஏற்கனவே இருளுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் ஆகி இருக்கும். இதன் மூலம் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற முடியும். ஆனால் திடீரென இருளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை பயணிகளுக்கு ஏற்பட்டால், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதில் கடுமையான சிரமங்கள் ஏற்படும்.

இதனால்தான் முன்கூட்டியே லைட்களை அணைத்து, இருளுக்கு ஏற்ப பயணிகளின் கண்களை அட்ஜெஸ்ட் செய்கின்றனர். அதேபோல் லைட்கள் அணைக்கப்பட்டாலோ அல்லது 'டிம்' செய்யப்பட்டாலோ அவசரகால பாதை விளக்குகள் மற்றும் குறியீடுகள் பயணிகளுக்கு இன்னும் தெளிவாக தெரியும்'' என பைலட்கள் கூறுகின்றனர்.