ஊரில் இருக்கும் எல்லாரும் கண்மூடித்தனமா வாங்கி வரும் டாடா கார்கள்! இந்த 7 மாடல்களுக்கு ரொம்ப அதிக மவுசு

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி & விற்பனை நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 ஆயிரம் கார்கள் டாடா பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த எண்ணிக்கை கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் 60 ஆயிரத்தை கடந்து 62,329-ஐ தொட்டுள்ளது. ஒரு மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்த அதிகப்பட்ச கார்களின் எண்ணிக்கை இதுவாகும். அதுவே, 2025 பிப்ரவரியில் வெறும் 46,437 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. 62,329 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-7 டாடா கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

top-7 most sold tata cars

டாடா நெக்ஸான் (Tata Nexon): வழக்கம்போல், கடந்த பிப்ரவரி மாதத்திலும் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா காராக நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. டாடா கார் என்று மட்டுமின்றி, கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான காராக நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 19,430 ஆகும்.

டாடா பன்ச் (Punch): நெக்ஸானின் மினி வெர்சனாக விளங்கும் பன்ச் கடந்த மாதத்தில் 18,748 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2025 பிப்ரவரியில் 14,559 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2025ஆம் ஆண்டில் தொடர்ந்து மூன்று மாதங்களாக இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக பன்ச் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

top-7 most sold tata cars

டாடா சியரா (Sierra): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகமான சியரா கடந்த பிப்ரவரி மாதத்தில் 7,100 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் ஒரு சமயத்தில் பிரபலமாக இருந்த சியராவின் பெயரில் வந்ததால் உடனடியாகவே மக்கள் இந்த காரின் உற்பத்தியை டாடா நிறுவனம் வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த காரை புக் செய்த பின் டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டிய கால அளவு 6 மாதங்களில் இருந்து 7 மாதங்களாக அதிகரித்துள்ளது.

டாடா டியாகோ (Tiago): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான ஹேட்ச்பேக் காரான டியாகோ கடந்த மாதத்தில் 7,040 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2025 பிப்ரவரியிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான டியாகோ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. புதிய மேம்படுத்தப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹாரியர் (Harrier): டாடா மோட்டார்ஸின் விலைமிக்க 5-சீட்டர் காரான ஹாரியரின் விற்பனை 2025 பிப்ரவரியை காட்டிலும் இந்த 2026 பிப்ரவரியில் டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 2025 பிப்ரவரியில் 1,376 ஹாரியர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2026 பிப்ரவரியில் 3,096 ஹாரியர் கார்கள் விற்கப்பட்டுள்ளன.

Model Feb'26 Sales Feb'25 Sales Growth (%)
Tata Nexon 19,430 15,349 27%
Tata Punch 18,748 14,559 29%
Tata Sierra 7,100 NA
Tata Tiago 7,040 6,954 1%
Tata Harrier 3,096 1,376 125%
Tata Altroz 2,063 1,604 29%
Tata Curvv 1,755 3,483 -50%
Tata Safari 1,650 1,562 6%
Tata Tigor 1,447 1,550 -7%
Total 62,329 46,437 34%

டாடா அல்ட்ராஸ் (Altroz): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விலைமிக்க பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ் கடந்த மாதத்தில் 2,063 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2025 பிப்ரவரியில் 1,604 அல்ட்ராஸ் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. விற்பனையில் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக அல்ட்ராஸ் விளங்குகிறது.

டாடா கர்வ் (Tata Curvv): டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்க்கெட்டில் களமிறக்கிய கார் இதுவாகும். ஆனால், இது பெரியதாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது அதன் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது. 2025 பிப்ரவரியில் சுமார் 3,483 கர்வ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,755 கர்வ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக இருந்தாலும், உண்மையில் இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை ரோலர் கோஸ்டர் போலவே ஏற்றம், இறக்கமாக உள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிகளில் விற்பனையில் சற்று சரிவை கண்டுவந்த டாடா மோட்டார்ஸ் புதிய 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மீண்டும் எழுச்சி காண துவங்கியுள்ளது. இதற்கு நாம் இந்த தொகுப்பில் பார்த்த 7 கார்களின் விற்பனை அதிகரிப்பே காரணம் என சொன்னால் அது மிகையில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 11, 2026, 18:34 [IST]
English summary
Top 7 most sold tata cars in february 2026 nexon punch sierra tiago check all details here
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+