இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் டூர் செல்வதற்கு முன்பு என்னென் விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றை உடைத்தெறியும் வகையில் கோடை வெயில் புதிய செல்சியஸ் இலக்கில் சுட்டெரித்து வருகின்றது. சொல்லவே வேண்டாம் இந்த ஆண்டும் முன்கூட்டியே கத்தரி வெயில் (ஆரம்பிக்கும் முன்பே) தொடங்கியதுபோல் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் வெளிப்புற உஷ்னத்தையும், வெளிப்புற உஷ்னத்தையும் போக்கும் வகையில் ஓர் ரிலாக்ஸ் டூர் போகலாம் என நினைத்தால் 'லாக்டவுண்' பிரச்னை தலைக்கு மேல் கத்தியைப் போல் தொங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லாத்தையும் பிளான் செய்த பின்னர் அரசு முழு லாக்டவுண் கொண்டு வந்துவிடுமோ என்ற பதற்றம் அனைவரின் மத்தியிலும் இருக்கதான் செய்கின்றது.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

இருப்பினும் ஒரு சிலர் இந்த கோடை வெயிலைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக கொரோனா வைரஸ் லாக்டவுணையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா சென்ற வண்ணம் இருக்கின்றனர். அவ்வாறு சுற்றுலா செல்லும்போது, குறிப்பாக தங்கள் வீட்டு சுட்டீஸ்களுடன் சுற்றுலா செல்வோர்க்கு உதவும் வகையிலான டிப்ஸ்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

'சுற்றுலா' இந்த வார்த்தையைக் கேட்ட உடனேயே நம்மில் பலரின் நினைவில் அழகிய மலைகள், கோட்டைகள் மற்றும் இருபுறத்திலும் வளைந்து நிற்கும் மரங்கள் நிறைந்த நீண்ட நெடுந்தூர சாலைகள் ஆகியவையே நினைவிக்கு வரும். இந்தமாதிரியான சுற்றுலாவை இன்பானாதாகவும் சுவாரஷ்யமானதாகவும் மாற்றுவது நம்முடைய கையிலேயே உள்ளது. அவையே கீழே உள்ளன. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

நேரம்:

அதாவது, சுற்றுலா செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே திட்டமிடுவது மிக மிக சிறந்தது. குறிப்பாக, கோடைக் காலத்தில் பயணிக்கும்போது ப்ரீ பிளான் செய்து செய்வது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும். உங்கள் கோடைக்கால சுற்றுலா பயண திட்டத்தில் முதல் பிளானாக இருக்க வேண்டியது புறப்படும் நேரம்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

அதிகாலை நேரங்களில் உங்களது பயணத்தைத் தொடங்குவது மிகச் சிறந்தது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் சுற்றுலா செல்லும்போது உச்சி வெயில் நேரமான மதியம் 12 மணி தொடங்கி 3 மணி வரையில் பயணத்தை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

தண்ணீர்:

தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெயில் காலங்களில் அதிகம் தாகம் எடுக்கும். குறிப்பாக, சிறுவர்கள் எப்போது தண்ணீர் கேட்பார்கள் என்றே தெரியாது. அந்த மாதிரியான நேரங்களில் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்து தண்ணீரை தவிர்த்துவிடாதீர்கள். சில நெடுஞ்சாலைகளில் தண்ணீர் அவ்வளவு கிடைத்து விடாது.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

அதுமட்டுமின்றி கிடைக்கும் தண்ணீர் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்கும் என்றும் நம்ப முடியாது. ஆகையால், தண்ணீரை கூடுதலாக கேன் நிரப்பிக் கொண்டு செல்வது சிறந்தது. அதிலும், சிறுவர்களுக்கென பிரத்யேகமாக காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை எடுத்து செல்வது தேவையற்றை உடல் உபாதைகளைத் தவிர்க்க உதவும்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

உணவு:

வெளிப்புற உணவகங்களில் தரமான மற்றும் சுவையான கிடைக்கும் என நம்புவது தேவையற்றது. ஆகையால், நமக்கான உணவை வீட்டிலேயே தயார் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கான உணவை வீட்டிலேயே சமைத்து எடுத்து செல்வது அவசியமானதாக உள்ளது.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

அதேசமயம், தேவையற்ற உபாதைகளைத் தவிர்க்க ஸ்நேக்ஸ் மற்றும் பிற நொறுக்கு (பேக்கட்டில் அடைத்து வைக்கப்பட்ட) தீனிகளை அறவே தவிர்ப்பதும் நல்லது. கவர்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவுகளுக்கு பதிலாக பழங்கள், வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட ஜூஸ் ஆகியவற்றை மிக தாராளமாக எடுத்துச் செல்லலாம்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

உடை:

வெயிலுக்கு ஏற்ற உடையை குழந்தைகளுக்கு அணிவித்தல் சிறந்தது. குறிப்பாக, காட்டன் போன்ற அதிக காற்றோட்டத்தை வழங்கக் கூடிய உடைகளை சிறுவர்களுக்கு அணிவியுங்கள். இது வெயிலால் ஏற்படும் எரிச்சல் மற்றும் புழுக்கத்தைத் தவிர்க்க உதவும்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

பயணத்தைத் தொடுங்கும் முன்பே குறிப்பாக சிறுவர்களை கழிவறைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்துவிடுங்க. இது தேவையற்ற நேரங்களில், தேவையில்லாமல் சாலையோரத்தில் காரை நிறுத்து வைத்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க உதவும். தொடர்ந்து, குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் டயப்பர்களை அவ்வப்போது செக் செய்ய வேண்டும். நீண்ட நேரங்களுக்கு ஒரே டயப்பரை பயன்படுத்த வேண்டாம். இது தேவையற்ற அலர்ஜியை உருவாக்க வழி வகுக்கும்.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

முன்னெச்சரிக்கை:

சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கான மாத்திரைகளை எப்போதும் கையிருப்பு வைத்திருப்பது சிறந்தது. குறிப்பாக, பயணங்களின்போது வைத்திருப்பது தட்டுப்பாட்டின்போது பயன்படுத்திக் கொள்ள உதவும். நாம் பயன்படுத்தும் அல்லது தேடும் மாத்திரைகள் சில இடங்களில் கிடைக்காது.

இந்த கொளுத்தும் வெயில்ல குட்டி பசங்களோட டிராவல் பண்ண போறீங்களா... அப்போ இத முதல்ல தெரிஞ்சுட்டு போங்க!!

இந்த மாதிரியான நேரங்கள் நம்முடைய பயண நேரத்தைக் கூட்டிவிடும். இத்துடன், தேவையற்ற அலைச்சலையும் ஏற்படுத்திவிடும். ஆகையால், ஊர் சுற்ற செல்லும் முன்பே ஒவ்வாமை, தலை வலி போன்றவற்றிற்கான மாத்திரையை எடுத்துக் கொண்டு செல்லலாம்.

எந்த மாதிரியான இடத்தை தேர்வு செய்யலாம்:

எந்த மாதிரியான இடத்தை தேர்வு செய்யலாம்:

குழந்தைகள் உங்களுடன் டூர் வருகிறார்கள் என்றால் அமைதியான மற்றும் இயற்கையான இடங்களை தேர்வு செய்வது மிக சிறந்தது. அங்கிருக்கும் சுத்தமான காற்று அவர்களின் உடலுக்கு நல்ல பலனை வழங்கும். ஆகையால், தியேட்டர், தீம் பார்க் மற்றும் சர்க்கஸ் போன்ற இடங்களை தவிர்ப்பது மிக சிறந்தது.

எந்த மாதிரியான இடத்தை தேர்வு செய்யலாம்:

மிக முக்கியமானது:

குழைந்தைகளைக் கையில் தூக்கி செல்வோர் பால் பாட்டில், கூடுதல் டையப்பர்கள், வாட்டர் பாட்டில்கள் மற்றும் கை குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் போன்ற மிக அத்தியாவசியப் பொருட்கள் நம்முடைய பைகளில் இருக்கின்றனவா என செக் செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பொருட்கள் நெடுஞ்சாலை கடைகளில் கிடைப்பது மிக மிக சிரமம்.

எந்த மாதிரியான இடத்தை தேர்வு செய்யலாம்:

மேலே கூறப்பட்ட அனைத்து டிப்ஸ்களையும் ஃபாலோ செய்து உங்கள் டூரை ஆரம்பிப்பீர்களானால் நீங்களும், உங்களின் குழந்தைகளும் நிச்சயம் இந்த டூரை மிக மிக ஜாலியாக அனுபவிப்பீர்கள்.

Most Read Articles
English summary
Here Is Full Tips For Travel With Kids. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X