Just In
- 30 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்? இன்ஸ்டா பக்கத்த பாருங்க!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இரவு முழுக்க ஆற்றின் நடுவே சிக்கி தவித்த இளைஞர்! தக்க நேரத்தில் மீட்ட ஹெலிகாப்டர்! திக் திக் வீடியோ!
ஆற்றுக்கு நடுவே சிக்கிய இளைஞரை இந்திய விமானப் படையினர் மீட்டெடுக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் தக்கத்தால் இந்த ஆண்டு பருவ மழை சற்று கூடுதலாகவே இருக்கும் என கூறப்பட்டு வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பருவ மழை பொழிய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ஒரு சில மாநிலங்களில் தற்போது கன மழைப் பொழிந்து வருகின்றது.

இதன் விளைவாக நீராதாரங்களான ஆறுகள் மற்றும் அணைகள் ஆகியவற்றில் நீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது. இம்மாதிரியான, சூழ்நிலையிலேயே வடக்கு மாநிலங்கள் பல சிக்கித் தவித்து வருகின்றன. அந்தவகையில், சத்திஸ்கர் மாநிலத்தின் ரதன்பூர் மாவட்டமும் கடும் மழை வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றது.

இந்நிலையில், குட்டகட் அணையின் வெள்ள நீருக்கு இடையில் இளைஞர் ஒருவர் சிக்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து அந்த நபரை ஐஏஎஃப் எம்ஐ-17 ஹெலிகாப்டர் உதவியுடன் அம்மாநில பேரிடர் மீட்பு குழு மீட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் ஆக்கிரமைத்துக் கொண்டு வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா குமார் கஸ்யூவ், இவரே வெள்ள நீரில் சிக்கியவர். இவருக்கு 34 வயது என கூறப்படுகின்றது. இவரே, நேற்றைய (ஆகஸ்டு 16) தினம் குட்டகட் அணைக்கு உபரிநீரை எடுத்துச் செல்லும் கால்வாயில் குளித்துக் கொண்டிருநததாகக் கூறப்படுகின்றது. அப்போது திடீரென அவர் வெள்ள நீரில் அடித்துச் சென்றுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக நேற்றைய தினம் அவரை மீட்க யாரும் வராதப்படாத நிலையில், இன்று (ஆகஸ்டு 17) இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டரின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இதனால், அந்த இளைஞர் ஒரு நாள் முழுக்க பெருக்கெடுத்து ஓடும் நீருக்கு இடையில் இருக்க ஆளானார்.

அப்போது, வீழ்ச்சிக்கு அருகில் இருந்த ஓர் மரக் கிளையே அவருக்கே பாதுகாப்பு வழங்கியிருக்கின்றது. அதைப் பிடித்தவாறே அவர் ஒரு நாளை கட்டாற்று வெள்ளத்திற்கு இடையில் கழத்திருக்கின்றார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களே பதைபதைக்க வைக்கும் இந்த தகவலை தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையிலே விமானப்படையின் வீரர்களின் உதவியுடன் அந்த இளைஞர் மீட்கப்பட்டிருக்கின்றார். ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் மீட்கப்பட்டதற்கான காரணம் பற்றிய தகவல் தெரியவரவில்லை. இந்தியாவில் இதுபோன்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் பல முறைச் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், இந்த சம்பவத்தில் அதிக மழை அல்லது இருட்டான சூழல் உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பெய்த பெரு மழையில் சிக்கிய 125 பேரை இந்திய விமானப் படை வீரர்கள் வெள்ளத்தில் இருந்து துரித நேரத்தில் மீட்டெடுத்து இருக்கின்றனர்.

இதுபோன்று பல முறை இந்திய வீரர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து மீட்டெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. சில நேரங்களில் இயற்கை ஒத்துழைக்காதது மற்றும் தக்க சூழ்நிலை இல்லாதது போன்ற காரணங்களினால் மீட்பு பணியில் தொய்வுப் பணி ஏற்படுகின்றது.

இதன் விளைவு சில அப்பாவி உயிர்களை இழக்க நேரிடுகின்றது. எனவேதான் அண்மைக் காலங்களாக மீட்பு பணிகள் துரித வேகத்தில் செய்யப்படுகின்றன. இதனடிப்படையிலேயே மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருந்த இளைஞரை பேரிடர் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரின் மூலம், கயிறு கொண்டு காப்பாற்றியிருக்கின்றனர்.

இதற்காக எம்ஐ17 ஹெலிகாப்டர் இன்று அதிகாலையே வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்தே மீட்பு பணி செய்யப்பட்டு, அந்த இளைஞர் அருகில் இருந்த ராம்கிருஷ்ணா சிஏஆர்இ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக அம்மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவம் அவசர காலங்களில் தனது விமானப் படையை பலப்படுத்தும் விதமாக எம்ஐ 17/எம்ஐ-8எம் என அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டரை சேர்த்துள்ளது. இதை ரஷ்யாவிடம் இருந்தே இந்தியா பெற்றிருக்கின்றது. இது ஒரு நடுத்தர இரட்டை-விசையாழி போக்குவரத்து ஹெலிகாப்டர் ஆகும். ஆயுதமேந்திய துப்பாக்கி பதிப்பிலும் இருக்கின்றது. இந்த ஹெலிகாப்டரே இளைஞரின் மீட்புப் பணியில் உதவியிருக்கின்றது.