Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 6 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கப்பல் போன்ற ரோல்ராய்ஸ் கார் இருக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்... ரொம்ப யோசீக்காதீங்க இதுதான் காரணமாம்...
நடிகர் விஜய் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும்நிலையில் இதுதான் உண்மை காரணம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பலர் தங்களின் ஜனநாயக கடமையான வாக்களிப்பை செய்ய அதி காலை முதலே வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பல்வேறு கட்சி தலைவர்கள் தொடங்கி நடிகர், நடிகைகள் என பல முக்கிய பிரபலங்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜயும் தனது வாக்கை செலுத்துவதற்காக திருவான்மியூர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, நீலாங்கரை வாக்குசாவடி மையத்திற்கு வந்தார். அவ்வாறு, அவர் வாக்குசாவடிக்கு வர சைக்கிளையே பயன்படுத்தினார். பெரும்பாலான பிரபலங்கள் தங்களின் விலையுயர்ந்த சொகுசு காரில் வந்திறங்கி கெத்து காட்டியநிலையில், நடிகர் விஜய் மட்டும் வித்தியாசமான வகையில் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

இதுவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியது, ஆளும் அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலேயே செய்திருப்பதாக கூறப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றது. இதனால், தினசரி கூலிகள் மற்றும் அடித்தட்டு மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையிலேயே மறைமுகமாக தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களிப்பு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இதற்கு மற்றுமொரு காரணமும் இருப்பதாக விஜயின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதாவது, விஜய் பொதுவாகவே சமூக நலத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த காலங்களில், ஜல்லி கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் இல்லத்திற்கே சென்று ஆறுதல் கூறியது என பல்வேறு எதிர்பார்த்திராத செயல்களை அவர் செய்திருக்கின்றனர்.

அந்தவரிசையில், பெட்ரோல், டீசல் வாகனங்களால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்பை எடுத்துரைக்கும் வகையில் அவர் சைக்கிளில் பயணித்து சென்று வாக்கு செலுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றிற்கு முற்று புள்ளி வைக்க வேண்டுமானால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமும்கூட.

இந்த நிலையிலேயே உலக வெப்ப மயமாதலுக்கு எதிராக பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையில் அவர் சைக்கிளைப் பயன்டுத்தியிருக்கின்றார். இதுதவிர, சைக்கிள் பயணத்தின்போது பச்சை நிற சட்டையையும் அவர் அணிந்து சென்றிருக்கின்றார். ஆகையால், நடிகர் விஜய்யின் சைக்கிள் பயணம் சமூக நல அக்கறையுடன் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆனால், இந்த சர்ச்சைகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை விஜய் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், நாம் இங்கு கவனிக்க வேண்டிய மற்றுமொரு விஷயமும் இருக்கின்றது. நடிகர், விஜய் கடந்த முறை வாக்களிக்க சென்றபோது சைக்கிளில் சென்றே வாக்களித்தார். ஆகையால், மாசுபாட்டை குறைக்கும் நோக்கிலேயே சைக்கிளைப் பயன்படுத்தினார் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.

அதேசமயம், நடிகர் விஜய் ஓட்டி சைக்கிளின் நிறத்தாலும் சர்ச்சை எழும்பியுள்ளது. விஜய் ஓட்டி வந்த சைக்கிள் குறிப்பிட்ட கட்சியின் கொடியை குறிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் நடிகர் விஜய் அச்சைக்கிளை பயன்படுத்தியுள்ளாரா என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
தமிழ் திரையுலகின் அதிகம் சம்பளம் பெரும் நடிகர்களில் விஜயும் ஒருவர். இவரிடத்தில் ஏராளமான சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ரோல்ராய்ஸ் தொடங்கி பென்ஸ், பிஎம்டபிள்யூ என பல்வேறு நிறுவனங்களின் விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.