மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

8 சிக்சர்களை விளாசிய அதிரடி வீரர் கெவின் ஓ ப்ரையன், போட்டி முடிந்ததும் நேராக டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு சென்ற ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

அயர்லாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கெவின் ஓ ப்ரையன் (Kevin O'Brien) பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. கத்துக்குட்டி என வர்ணிக்கப்பட்டு வந்த அயர்லாந்து அணி, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் அணிகளுக்கு எல்லாம் ஒரு சில முறை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. அயர்லாந்தின் அந்த வெற்றிகளுக்கு எல்லாம் பின்னால் இருந்தது கெவின் ஓ ப்ரையனின் அதிரடி ஆட்டம்தான்.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

அயர்லாந்து அணிக்கு கிடைத்த பொக்கிஷம் கெவின் ஓ ப்ரையன். ஆனால் பேட்டிங்கில் தனக்கு இருக்கும் வலிமையை நினைத்து கெவின் ஓ ப்ரையன் வருத்தப்படும்படியான ஒரு நிகழ்வு தற்போது நடந்துள்ளது. கெவின் ஓ ப்ரையன் விளாசிய சிக்சர், அவருக்கு சொந்தமான காரின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியிருப்பதே இந்த வருத்தத்திற்கு காரணம்!!

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

தற்போது அயர்லாந்தில் இருக்கும் கெவின் ஓ ப்ரையன், அங்கு நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில், லென்ஸ்டர் லைட்னிங் (Leinster Lightning) அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் நான்காவது போட்டி, டப்ளின் நகரில் இருக்கும் பெம்ப்ரோக் கிரிக்கெட் க்ளப் மைதானத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

இதில், லென்ஸ்டர் லைட்னிங் மற்றும் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் (North-West Warriors) ஆகிய அணிகள் மோதின. மழை குறுக்கிட்டதால், 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த லென்ஸ்டர் லைட்னிங் அணி 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை குவித்தது. இதில், கெவின் ஓ ப்ரையன் வெறும் 37 பந்துகளில் 82 ரன்களை (8 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார்.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

கெவின் ஓ ப்ரையன் விளாசிய சிக்சர்களில் ஒன்று, மைதானத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காரை பதம் பார்த்தது. வேகமாக பறந்து வந்த பந்து, அந்த காரின் பின் பக்க கண்ணாடியை உடைத்து நொறுக்கியது. இது கெவின் ஓ ப்ரையனுக்கு சொந்தமான டொயோட்டா நிறுவனத்தின் செடான் ரக கார் ஆகும்.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

போட்டி முடிந்த பின்னர் உடைந்த கண்ணாடியை மீண்டும் பொருத்துவதற்காக காரை நேராக டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு கெவின் ஓ ப்ரையன் ஓட்டி சென்றார். டப்ளின் நகரில் உள்ள டொயோட்டா லாங் மைல் என்ற டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு கார் கொண்டு செல்லப்பட்டது. ''கவலைப்பட வேண்டாம் கெவின் ஓ ப்ரையன். நாங்கள் இதை புதியது போல் சரி செய்து தருகிறோம்'' என அந்த டீலர்ஷிப் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

முன்னதாக நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், லென்ஸ்டர் லைட்னிங் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக பேட்டிங் செய்த 12 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் முறைப்படி) லென்ஸ்டர் லைட்னிங் வெற்றி பெற்றது.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் லின் சிக்சருக்கு விளாசிய ஒரு பந்து, பவுண்டரி எல்லையில் காட்சிக்கு நிறுத்தப்பட்டிருந்த டாடா ஹாரியர் காரின் முன் பக்க விண்டுஸ்க்ரீனை தாக்கியது.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

பந்து பலமாக தாக்கியபோதும், டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விண்டுஸ்க்ரீனுக்கு எவ்விதமான சேதராமும் ஏற்படவில்லை. அந்த சமயத்தில் இந்த காணொளி சமூக வலை தளங்களில் மிக வேகமாக பரவியது என்பது. அதேபோல் கடந்த 2018ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒரு போட்டியில் பேட்ஸ்மேன் சிக்கந்தர் ராசா விளாசிய ஒரு பந்து, வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காரை தாக்கியது.

மேட்ச் முடிந்த உடன் டொயோட்டா டீலர்ஷிப்பிற்கு ஓடிய அதிரடி பேட்ஸ்மேன்... இப்படி எல்லாம் கூட நடக்குமா?

அதற்கு முன்னதாக கடந்த 2000மாவது ஆண்டில் நடந்த ஒரு போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ சிக்சருக்கு விளாசிய பந்து ஒன்று, மைதானத்திற்கு வெளியே பறந்து வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜெஃப்ரி பாய்காட்டின் காரை பதம் பார்த்ததாக கூறப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ireland Batsman Kevin O'Brien Smashes Ball Out Of The Ground, Hits Own Car In Parking Area. Read in Tamil
Story first published: Friday, August 28, 2020, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X