கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் ஆகிய கார்களுக்கு இடையே டிராக் ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

கியா நிறுவனம் செல்டோஸ் காரை இந்திய சந்தையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது இந்திய சந்தையில் கியா செல்டோஸ் எஸ்யூவி மிகவும் பிரபலமாகி விட்டது. சாலைகளில் செல்டோஸ் எஸ்யூவியை அதிகம் பார்க்க முடிகிறது. வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பின் காரணமாக செல்டோஸ் காருக்கு நீண்ட காத்திருப்பு காலம் நிலவி வருகிறது.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய மாடல்களில் கியா நிறுவனம் செல்டோஸ் காரை விற்பனை செய்து வருகிறது. மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகளுடன் கியா செல்டோஸ் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின்தான் அதிக சக்தி வாய்ந்தது. அதற்காக மற்ற இரண்டு இன்ஜின்களையும் குறை சொல்லி விட முடியாது. அவையும் சக்தி வாய்ந்தவைதான்.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்த சூழலில், ட்ராக் ரேஸில் கியா செல்டோஸ் எவ்வளவு விரைவாக செயல்படும்? என்பதை விளக்கும் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. கியா செல்டோஸ் டீசல் ஆட்டோமெட்டிக் - டொயோட்டா பார்ச்சூனர் 2.8 ஆட்டோமெட்டிக் கார்களுக்கு இடையே இந்த டிராக் ரேஸ் நடைபெற்றுள்ளது. சஞ்ஜீட் ஜாட் என்ற யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சாலையில் இந்த டிராக் ரேஸ் நடந்துள்ளது. இதன்மூலம் மற்ற வாகனங்களின் குறுக்கீடு தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இதுபோன்ற டிராக் ரேஸ்களை நடத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொது சாலைகளில் இத்தகைய டிராக் ரேஸ்களை நடத்துவது மிகவும் ஆபத்தானது. இது விபத்துக்களுக்கு வழிவகுக்கும்.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

பொது சாலைகளில் டிராக் ரேஸ் நடத்துவது சட்ட விரோதம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே காலியாக இருந்த சாலை ஒன்றில் இந்த டிராக் ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. இந்த சாலையின் நீளம் எவ்வளவு? என்பது சரியாக தெரியவில்லை. இருந்தாலும் குறைந்தபட்சம் சில நூறு மீட்டர்கள் நீளம் இருக்கலாம் என்பது போல் தெரிகிறது.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

முதல் முயற்சியில், டொயோட்டா பார்ச்சூனரை பின்னுக்கு தள்ளி கியா செல்டோஸ் வேகம் எடுப்பதை காண முடிகிறது. அத்துடன் இறுதி வரை தனது முன்னிலையை கியா செல்டோஸ் தக்க வைக்கிறது. அதே சமயம் இரண்டாவது முயற்சியில், பந்தயம் தொடங்கியதும் டொயோட்டா பார்ச்சூனர் சிறிய முன்னிலையை பெறுகிறது. எனினும் ஒரு கட்டத்தில் கியா செல்டோஸ், பார்ச்சூனரை முந்தி விட்டது.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்த இரண்டு எஸ்யூவிகளையும் ஒப்பிட்டால், கியா செல்டோஸை காட்டிலும் டொயோட்டா பார்ச்சூனர்தான் அதிக சக்தி வாய்ந்தது. இங்கே பந்தயத்தில் ஈடுபடுத்தப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் காரில், 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 174 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

அதே சமயம் செல்டோஸ் டீசல் காரில், 1.5 லிட்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காணொளியில் நாம் பார்க்கும் இரண்டு கார்களுமே ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனைதான் பெற்றுள்ளன. எனினும் கியா செல்டோஸ் உடன் ஒப்பிடும்போது டொயோட்டா பார்ச்சூனர் மிகவும் பெரியது.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

டொயோட்டா பார்ச்சூனர் காரின் எடை 2,180 கிலோ. இதனுடன் ஒப்பிடும்போது கியா செல்டோஸ் காரின் எடை கிட்டத்தட்ட 1,000 கிலோ குறைவு. அதாவது கியா செல்டோஸ் காரின் எடை வெறும் 1,360 கிலோ மட்டும்தான். ஒரு காரின் செயல்திறனை நிர்ணயிப்பதில் எடை எவ்வளவு முக்கியமானது என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.

கியா செல்டோஸ் - டொயோட்டா பார்ச்சூனர் இடையே ரேஸ்... வெற்றி பெற்றது எந்த கார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க

இதன் காரணமாகதான் செயல்திறன் சார்ந்த மற்றும் ஹை-எண்ட் சூப்பர் கார்களில், இலகுரக பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த கார்களின் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சில வசதிகள் வழங்கப்படுவதும் கூட தவிர்க்கப்படுகிறது. டொயோட்டா பார்ச்சூனர் - கியா செல்டோஸ் இடையே நடத்தப்பட்ட டிராக் ரேஸில் கியா செல்டோஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

இது குறுகிய தொலைவு நடத்தப்பட்ட டிராக் ரேஸ் என்பதால் செல்டோஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிக தொலைவிற்கு நடத்தப்பட்டால் செல்டோஸை வீழ்த்தி பார்ச்சூனர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். ஏனெனில் அதிக சக்தி வாய்ந்த இன்ஜினை பார்ச்சூனர் பெற்றுள்ளது. ஆனால் குறுகிய தொலைவு போட்டிகள் என்றால், செல்டோஸ் வெல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia Seltos vs Toyota Fortuner Drag Race. Read in Tamil
Story first published: Tuesday, August 18, 2020, 21:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X