Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
பிரேக் பிடிக்காத காரணத்தால், ஓட்டுனர் ஒருவர் லாரியை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரிவர்ஸ் கியரில் ஓட்டியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரேக் திடீரென செயலிழந்ததால், ஓட்டுனர் ஒருவர் லாரியை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரிவர்ஸ் கியரில் இயக்கியுள்ளார். இறுதியில் ஒரு வழியாக லாரியை அவர் வெற்றிகரமாக நிறுத்தி விட்டார். சமூக வலை தளங்களில் தற்போது இந்த காணொளி வேகமாக பரவி வருகிறது. டிரான்ஸ்போர்ட் லைவ் என்ற யூ-டியூப் சேனல் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா - சிலோட் சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஒரு வழியை கண்டறியும் வரை அவர் லாரியை ரிவர்ஸ் கியரில் மெதுவாக ஓட்டி சென்றுள்ளார். லாரி ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருந்த பைக்கில் சிலர் அதனை பின் தொடர்வதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது.

இதில் சிலர் மற்ற வாகன ஓட்டிகளுக்கு லாரியின் நிலையை பற்றி எச்சரிக்கை செய்துள்ளனர். பிரேக்குகள் வேலை செய்யாத நிலையில், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடாமல் லாரியை ஓட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் இந்த கடினமான வேலையை லாரி ஓட்டுனர் கவனமாக செய்துள்ளார்.

பொதுவாக சிறிய டயர்களுடன் ஒப்பிடும்போது பெரிய டயர்கள் எளிதாக உருளும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக லாரியின் வேகம் குறையவில்லை. இறுதியாக ஒரு திறந்தவெளி காலி இடத்தை கண்டதும், அதனை நோக்கி ஸ்டியரிங் வீலை லாரியின் ஓட்டுனர் திருப்பியுள்ளார். அந்த காலி இடம் மிகவும் கரடுமுரடாக இருந்தது.

லாரியின் வேகம் குறைய இது உதவி செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக இறுதியில் ஒரு வழியாக லாரி நின்று விட்டது. இந்த காணொளியை வைத்து பார்க்கையில் எவ்விதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பது போல தெரிகிறது. லாரியின் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்துள்ளார்.

வாகனங்களை இயக்கும்போது சந்திக்கும் வாய்ப்புகள் உள்ள மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில் ஒன்று என பிரேக் ஃபெயிலியரை குறிப்பிடலாம். இந்திய சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 1.50 லட்சமாக உள்ளது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே இதற்கு முக்கிய காரணம் என்றாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

வாகனங்களில் ஒரு சில இயந்திரங்கள் திடீரென செயலிழந்து போவதும் இதில் ஒன்று. இதற்கு பிரேக் பிடிக்காமல் போவதை உதாரணமாக சொல்லலாம். பிரேக்குகள் இருக்கும் நம்பிக்கையில்தான் ஒருவரால் வாகனத்தை முன்னோக்கி வேகமாக செலுத்த முடிகிறது. ஆனால் பிரேக்குகள் வேலை செய்யாமல் போய்விட்டால், வாகனத்தை கட்டுப்படுத்தி நிறுத்துவது மிகவும் சிரமாகி விடும்.
சமீபத்தில் கூட தமிழகத்தில் லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் இரண்டு இளைஞர்களின் மீது மோத வந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு இளைஞர்களும் நூலிழையில் தப்பித்து விட்டனர். ஒரு வாகனத்திற்கு பிரேக் மிகவும் முக்கியமானது. எனவே வாகனத்தின் பிரேக்குகளை முறையாக பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.