Just In
- 45 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
140 லிட்டர் டீசலுடன் கையும் களவுமாக சிக்கிய இருவர்... விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்... தப்பிக்க என்ன வழி!!
4 மணி நேர தீவிர துரத்தலுக்கு பின்னர் மஹாராஷ்டிரா மாநில போலீஸார் இருவரைக் கைது செய்திருக்கின்றனர். கைதிற்கு பின் இருக்கும் பகீர் தகவலை இப்பதிவில் காணலாம்.

நான்கு மணி தீவிர துரத்தலுக்கு பின்னர் இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இருவரை நான்கு மணி நேரம் விரட்டிச் சென்று பிடித்ததற்கான காரணத்தையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். ஹிந்துஸ்தான் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டிருக்கும் தகவலைப் பார்க்கலாம் வாருங்கள்.

மஹாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இப்பகுதியில் அண்மைக் காலங்களாக திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, ரோந்து மற்றும் சோதனை மையங்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு காவல்துறையினர் ரோந்து செய்துக் கொண்டிருந்தபோது, இருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கின்ற வகையில் செயல்பட்டிருந்திருக்கின்றனர். எனவே அவர்களைநோக்கி சென்றவாறு இருவரையும் காவல்துறையினர் அழைத்திருக்கின்றனர்.

தங்களை அழைப்பது போலீஸ் என்பதை அறிந்து அந்த மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதைத்தொடர்நது, காவலர்களும் அவர்களை விடாமல் விரட்டிச் சென்றனர். இவ்வாறு நான்கு மணி விரட்டலுக்கு பின்னரே அந்த இரு மர்ம நபர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடத்தில் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் எரிபொருளை திருடி வந்ததை ஒப்புக் கொண்டனர். தொடர்ச்சியாக செய்த விசாரணையில் அவர்கள் ஒட்டுமொத்தமாக 140 லிட்டர் டீசல் அன்றிரவு திருடியது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், எரிபொருளை திருடுவதற்காக பயன்படுத்திய டூப்ளிகேட் சாவிகளையும் அவர்களிடத்தில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றைக் கொண்டே சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை அவர்கள் திருடி வந்திருக்கின்றனர்.

இதனை நீண்ட நாட்களாக செய்துவந்த நிலையில் தற்போது இருவரும் கையும் களவுமாக போலீஸாரிடத்தில் சிக்கியிருக்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் இருவரையும் தற்போது காவலில் அடைத்திருக்கின்றனர்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டுமளவிற்கு உயர்ந்து வருகின்றது. மக்கள் அனைவரும் இதன் விலை எப்போது பழைய நிலைக்கு திரும்பும் என ஆவலோடு காத்திருக்கொண்டிருக்கின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் காரின் உரிமையாளர்களுக்கே தெரியாமல் எரிபொருளைத் திருடி வந்தவர்களைப் போலீஸார் கைது செய்திருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மன நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், முன்னதாக வாகனங்களையும் இதையடுத்து வாகனங்களின் உதிரிபாகங்களையும் களவு செய்து வந்த திருடர்கள் தற்போது தங்களின் கவனத்தை எரிபொருளின் பக்கம் திசை திருப்பியது வாகன உரிமைாயளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தவிர்ப்பது சற்று கடினம் என்றாலும் சிசிடிவி கேமிரா இருக்கும் பகுதி அல்லது மிக பாதுகாப்பான பார்க்கிங் ஆகியவற்றின்கீழே வாகனத்தை நிறுத்துவதன் மூலம் இதுபோன்ற முரண்பட்ட செயல்களில் இருந்து நம் வாகனங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.