Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காற்று மாசுபாட்டை குறைக்க மற்றுமொரு அதிரடி... மீண்டும் பெட்ரோல் விஷயத்தில் நடைபெற இருக்கும் அதிரடி மாற்றம்...
மத்திய அரசு பெட்ரோலில் மீண்டும் கை வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலை இப்பதிவில் காணலாம்.

காற்று மாசுபாட்டைக் குறைக்க நமது இந்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை முழுமையாக ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு பதிலாக மின் வாகன பயன்பாட்டைக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர்க்கு மானியம், வரி குறைப்பு, சிறப்பு தள்ளுபடி என எக்கசக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்ட பழைய (20 ஆண்டுகள் பழைய தனியார் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக) வாகனங்களை அடியோடு பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியிலும் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுபோன்ற எக்கசக்க நடவடிக்கைகள் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு நாட்டில் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக மற்றுமொரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி விட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக இம்முறை பெட்ரோலில் கை வைத்திருக்கின்றது அரசு. தற்போது கலக்கப்படும் எத்தனாலின் அளவை மீண்டும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போது, 90 சதவீதம் பெட்ரோல், 10 சதவீதம் எத்தனால் என்ற வீதத்தில் கலக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதிலேயே மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

அதாவது, 20 சதவீதம் எதனாலை (E20) 80 சதவீத பெட்ரோலுடன் கலந்து விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது. 2020ம் ஆண்டு இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.

10 சதவீத எத்தனால் கலக்க அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் பற்றாக்குறை காரணமாக 6 சதவீதம் வரை மட்டுமே பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியாண்டு 2018ல் இது 4.22 சதவீதமாக மட்டுமே இருந்தது.

இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு 20 சதவீத எத்தனால் கலப்படத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. 20 சதவீத எத்தனால் கலப்பின் வாயிலாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் சேமிக்க முடியும் என மத்திய பெட்ரோலியத்துறையின் செயலாளர் தருண் கபூர் தகவல் தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, பெட்ரோலியம் கொள்முதலுக்காக இந்தியா அரசு மேற்கொள்ளும் அந்நிய செலாவணியில் கணிசமான பாரத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என கூறப்படுகின்றது. இந்தியா 85 சதவீத எரிபொருள் தேவையை வெளிநாடுகளில் இருந்தே பூர்த்திச் செய்துகொள்கின்றது. இதற்காக பெரும் அளவிலான தொகையை அது செலவிடுவது குறிப்பிடத்தகுந்தது.

தூய்மை பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் (இ20) கலப்பதன் மூலம் அதிகளவில் வெளியாகும் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன் உமிழ்வைக் கணிசமாக குறைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தைக் கையிலெடுத்திருப்பதாகக் கூறி 20 சதவீத எத்தனால் கலப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.