முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

முகேஷ் அம்பானி குடும்பத்தினர் புதிய சூப்பர் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஏராளமாக இருக்கின்றன. எனினும் தொடர்ந்து மிகவும் விலை உயர்ந்த கார்களை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில், புதிய சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை தங்களது கராஜில் அவர்கள் தற்போது சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

ஃபெராரி எஸ்எஃப்90 ஸ்ட்ரடேல் (Ferrari SF90 Stradale) காரைதான் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தற்போது புதிதாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. viren_405 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இந்த காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

இந்த புதிய ஃபெராரி கார் ரேஸிங் ரெட் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. இது ஃபெராரி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான வண்ண தேர்வு ஆகும். தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில், இந்த புதிய ஃபெராரி கார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

அத்துடன் கராஜிற்குள் நுழைவது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஃபெராரி எஸ்எஃப்90 ஸ்ட்ரடேல் காரில், ட்வின்-டர்போசார்ஜ்டு 4.0 லிட்டர் வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

அதே சமயம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 200 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய வல்லமை இந்த காருக்கு உண்டு. அதே சமயம் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 340 கிலோ மீட்டர்கள். இந்த காரின் இன்ஜினுடன் 8 ஸ்பீடு ட்யூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

முந்தைய மாடலில் இருந்த 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் யூனிட் உடன் ஒப்பிடும்போது இந்த டிரான்ஸ்மிஷன் 30 சதவீதம் வேகமானது. அத்துடன் புதிய மாடலின் எடை 10 கிலோ குறைவு. மேலும் காம்பேக்ட் ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஃபெராரி நிறுவனத்தில் இருந்து வெளிவந்த முதல் ப்ளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் கார் (Plug-in Hybrid Electric Vehicle - PHEV) இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

இதன் காரணமாக இந்த சூப்பர் கார், தனியாக மின்சார சக்தியிலும் இயங்கும். 7.9 kWh பேட்டரி தொகுப்பு, 26 கிலோ மீட்டர் ரேஞ்ஜை வழங்குகிறது. இந்திய சந்தையில் ஃபெராரி எஸ்எஃப்90 ஸ்ட்ரடேல் கார், 7.50 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி வாங்கிய புதிய சூப்பர் காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க...

இப்படி ஒரு விலை உயர்ந்த காரைதான் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தற்போது வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களிடம் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி உள்பட ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இந்த வரிசையில் ஃபெராரி எஸ்எஃப்90 ஸ்ட்ரடேல் சூப்பர் காரும் இணைந்துள்ளதாக தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mukesh Ambani Family Buys Ferrari SF90 Stradale - Here Are All The Details. Read in Tamil
Story first published: Thursday, February 18, 2021, 18:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X