Just In
- 28 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி... எக்ஸ் ஷோரூம் விலையே இவ்வளவு கோடியா?
முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மீண்டும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கு மீண்டும் ஒரு முறை சொந்தக்காரர் ஆகியுள்ளார். முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கியுள்ள இரண்டாவது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கியிருந்தனர்.

முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கிய முதல் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் புதிய சேபிள் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது. அதே சமயம் அவர்கள் தற்போது வாங்கியுள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் ஆர்டிக் ஒயிட் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பழைய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை நம்மால் பார்க்க முடிந்துள்ளது.

எனினும் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை தற்போது வரை நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் மும்பையில் உள்ள அன்டிலியா வீட்டில் ஆர்டிக் ஒயிட் வண்ணத்தில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை CS 12 Vlogs என்ற யூ-டியூப் சேனல் வீடியோ எடுத்துள்ளது.

அன்டிலியா வீட்டில்தான் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில்தான் இரண்டாவதாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மிகவும் பிரபலமாக உள்ள எஸ்யூவி ரக கார் ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.8 லிட்டர் வி12 டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 560 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. அத்துடன் 4X4 சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

சவால் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற சில வசதிகளும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வளவு சொகுசான ஒரு காரை கரடுமுரடான ஆஃப் ரோடு பயணங்களுக்கு யாராவது எடுத்து செல்வார்களா? என்பது சந்தேகமே. அதிலும் குறிப்பாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இந்த காரில் ஆஃப் ரோடு பயணங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள முதல் எஸ்யூவி ரக கார் கல்லினன்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 7 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வருகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில மாடிஃபிகேஷன்களை செய்ய விரும்பினால், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை இன்னும் உயரும்.
இன்டீரியரில் ஒரு சில மாடிஃபிகேஷன்களை செய்தாலே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை வெகுவாக உயர்ந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் விலையை பொருட்படுத்தாமல் மாடிஃபிகேஷன் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவர்கள் வாங்கியதாக கூறப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் உண்மையான விலை எவ்வளவு? என்பது தெரியவில்லை.