ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

ஒரு குடும்பத்தினர் ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் கார் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. சந்தையில் பல்வேறு தேர்வுகள் உள்ள போதிலும், சாரா அலிகான், ஹர்திக் பாண்டியா மற்றும் அம்பானி குடும்பத்தினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் தனித்துவமான ஜி-க்ளாஸ் காரை தேர்வு செய்து வருகின்றனர்.

ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

இந்த சூழலில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒரு குடும்பத்தினர் ஒரே நாளில் 2 மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் கார்களை டெலிவரி எடுத்துள்ளனர். CS 12 Vlogs என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரே மாதிரியான இரண்டு கார்களை டெலிவரி எடுத்த குடும்பத்தினர் பற்றி அந்த வீடியோவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

அதேபோல் ஒரே மாதிரியான இரண்டு கார்களை டெலிவரி எடுத்ததற்கான காரணமும் தெரியவில்லை. எனினும் அந்த குடும்பத்தினர் ஷோரூமில் இருந்து கார்களை டெலிவரி எடுப்பதை காண முடிகிறது. அதேபோல் அவர்களை வாழ்த்துவதற்காக அங்கு ஏராளமான விலை உயர்ந்த கார்கள் அணிவகுத்திருப்பதையும் வீடியோவில் நாம் பார்க்கலாம்.

ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

இந்த குடும்பத்தினர் ஒரே வேரியண்ட்டை வாங்கியுள்ளனர். இது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் ஜி350டி வேரியண்ட் ஆகும். ஆனால் இவை இந்த எஸ்யூவியின் அதிக செயல்திறன் மிக்க ஏஎம்ஜி வெர்ஷன்கள் கிடையாது. எனினும் இந்த வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை 1.62 கோடி ரூபாய் வருகிறது. ஆன் ரோடு விலை சுமாராக 1.80 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வரும்.

ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

இந்த வேரியண்ட்டில், 3.0 லிட்டர், இன்-லைன் ஆறு-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 286 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இன்ஜின் சக்தியானது, நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்350டி மாடலில் உள்ள அதே இன்ஜின்தான், ஜி350டி மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, இது அதிக செயல்திறன் வாய்ந்த கார் கிடையாது. என்றாலும் 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 7.4 வினாடிகளில் எட்டி விடும்.

ஒரே நாளில் ஒரே மாதிரியான 2 பென்ஸ் கார்களை வாங்கிய குடும்பம்! விலையை மட்டும் கேட்காதீங்க!! தூக்கி வாரி போட்றும்

இந்தியாவில் பிரபலமான மனிதர்கள் பலரிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் கார்கள் உள்ளன. இதில், அம்பானி குடும்பத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் நிறைய மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் கார்களை வாங்கியுள்ளனர். அவை அம்பானி குடும்பத்தினரின் கான்வாயில் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதவிர ஹர்திக் பாண்டியா, சாரா அலிகான், ஜிம்மி ஷெர்கில், ரன்பீர் கபூர், பவன் கல்யாண் போன்ற இந்தியாவின் பிரபல மனிதர்கள் பலரும் இந்த காரை சொந்தமாக வைத்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-க்ளாஸ் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Mumbai: Family Buys 2 Mercedes-Benz G-Class G350d SUVs-Watch Video. Read in Tamil
Story first published: Tuesday, June 1, 2021, 19:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X