"அந்த விஷயத்துல தமிழ்நாடுதான் பெஸ்ட், அவங்கள பாத்து கத்துக்கங்க"... எப்பவுமே தமிழ்நாடு கெத்துதாங்க!!

குறிப்பிட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டை இந்தியா பின்தொடர வேண்டும் என போக்குவரத்து - தெற்காசியா, உலக வங்கியின் பயிற்சி மேலாளர் ஷோமிக் ராஜ் மெஹந்திராட்டா கூறியுள்ளார். அது என்ன என்பது பற்றிய விரிவான தகவலைக் கீழே காணலாம்.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து காணப்பட்டாலும், உயிரிழப்புகள் முன்பைவிட பல மடங்கு உயர்ந்திருப்பதாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கும் நிலை தற்போது உருவாகியிருக்கின்றது.

இந்த கொடிய வைரசைப் போலவே அதிகம் உயிர் பலிகளை வாங்கக் கூடியதாக சாலை விபத்துகள் உள்ளன. தற்போது எப்படி கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதோ, அதேபோன்று விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நடவடிக்கைகளும் பல காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், ஓர் புதிய தொழில்நுட்பத்தை இனி வரும் காலங்களில் கட்டமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் பன்படுத்த இருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. நாட்டில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கும் பொருட்டும் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருப்பதாக அது கூறியிருக்கின்றது.

இனி புதிதாக உருவாக்கப்படும் சாலைகளில், மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (Advanced Traffic Management System) பயன்படுத்த இருக்கின்றது. இது சாலை போக்குவரத்தை சீரமைத்து, விபத்துகளைக் குறைக்க உதவும். மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை என்றால் என்ன?, சாலையின் நடவடிக்கைகளை தொடர் கண்கானிப்பு செய்து அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் பரிமாற்றும் வகையில் இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டே சாலைகள் கட்டமைக்கப்பட இருப்பதாக ஆணையம் தெரிவித்திருக்கின்றது. புதிய சிஸ்டம் சாலையில் அரங்கேறும் எந்தவொரு நிகழ்வுகளையும் தவற விடாது. அது கண்டறியக் கூடிய எந்த நிகழ்வாக இருந்தாலும் அதுகுறித்த எச்சரிக்கையை உடனுக்குடன் வழங்கிவிடும்.

ஆகையால், அதேசாலையில் பயணிக்கும் பிற வாகனங்கள் இதுகுறித்த தகவலை உடனடியாக பெற்றுக் கொள்ளும். தொடர்ந்து, முன்கூட்டியே தகவல்கிடைப்பதால் கசப்பான அனுபவங்கள் தவிர்க்கப்படும்.

விபத்து, பிற காரணங்களால் ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகள், வானிலை தகவல் ஆகியவற்றை கண்கானிக்கும் வகையிலேயே புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி போக்குவரத்து விதிமீறல்களைக் கண்கானிக்கும் வகையிலும் புதிய சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகையால், "மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை பெறும் சாலைகள் அசம்பாவிதங்களை மட்டுமின்றி விதிமீறல்களை தடுக்கவும் உதவும்" என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உறுப்பினர் ஆர்கே பாண்டே கூறியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறையால் உருவாக்கப்பட்டு வரும் சாலைகள் அனைத்தும் பாதுகாப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். சாலையின் குறுக்கே செல்லும் மேம்பாலாங்களின் உயரம், சாலையின் அகலம் ஆகியவற்றையும் சீரமைக்க இத்திட்டத்தின்கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளவில் நடைபெறும் விபத்துகளில் 10 சதவீதம் இந்தியாவிலேயே அரங்கேறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உபி மற்றும் கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் விபத்துகளைக் குறைக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில், "தமிழகத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளால் பெருமளவில் விபத்துகள் குறைந்திருப்பதாகவும், இந்தியா இதன் வழியை பின்தொடர வேண்டும்" என்று போக்குவரத்து - தெற்காசியா, உலக வங்கியின் பயிற்சி மேலாளர் ஷோமிக் ராஜ் மெஹந்திராட்டா கூறியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதிலும் 4,500 ஆபத்தான (அதிகம் விபத்து அரங்கேறும்) பகுதிகளைக் கண்டறிந்தது. இவற்றில் 2,500 பகுதிகள் சரிசெய்யப்பட்டன. மேலும், ஆயிரம் பகுதிகள் விரைவில் சரிசெய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
NHAI To Use Advanced Traffic Management System For Mitigate Fatal Accidents. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X