தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்... முக கவசம் அணியாத காவலருக்கு ரூ.2,000 அபராதம்!!

முக கவசம் அணியாத போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளுக்கு அதிரடியாக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்... முக கவசம் அணியாத காவலருக்கு ரூ.2,000 அபராதம்!!

கொரோனா வைரஸினால் கடந்த 2020ஆம் ஆண்டு முழுவதும் ஊரடங்கிலேயே சென்றுவிட்டது. இதனால் 2021ஆம் ஆண்டாவது நல்லப்படியாக இருக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டினோம்.

2021ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் ஓரளவுக்கு பராவயில்லை. சில தொழில்கள் நீண்ட மாத தடைக்கு பிறகு மீண்டும் துவங்கின. மீண்டும் நமது இயல்பு வாழ்க்கை ஆரம்பிப்பது போல் இருந்தது.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்... முக கவசம் அணியாத காவலருக்கு ரூ.2,000 அபராதம்!!

ஆனால் சமீப வாரங்களாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிப்பிற்கு உள்ளாவோரின் எண்ணிக்கையும், மரணம் அடைவோரின் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனை குறைக்க மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் ஒடிசா மாநில அரசாங்கம் மக்கள் முக கவசம் அணிவதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘மாஸ்க் அபியன்' என்கிற முயற்சியை கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தினால் ஒடிசாவில் வீட்டை விட்டு வெளியேவரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்கிற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மீறுப்பவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்... முக கவசம் அணியாத காவலருக்கு ரூ.2,000 அபராதம்!!

பொது மக்களுக்கே இப்படியென்றால், சமூக பணியாற்றும் போலீஸார்களுக்கு முக கவச விஷயத்தில் கிடுக்குப்பிடிகள் இன்னும் அதிகம். நிலைமை இப்படியிருக்க, முக கவசம் அணியாமல் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்துள்ளார்.

இதனை கண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக அந்த கான்ஸ்டபிளுக்கு ரூ.2,000 அபாரதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக ஒடிசா மாநில புரி நகர போலீஸாரின் டுவிட்டர் பக்கத்தில், எங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதற்கு இணங்க, எங்களது போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளுக்கு முக கவசம் அணியாத காரணத்தினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்... முக கவசம் அணியாத காவலருக்கு ரூ.2,000 அபராதம்!!

அவர், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக அபராத பணத்தை செலுத்தியுள்ளார். மாஸ்க் எப்போதும் அணியுங்கள் அல்லது அபராதம் செலுத்துங்கள், மாற்று வழி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் மக்களை காப்பாற்றவில்லை என்றால் அது ஒரு மிக பெரிய செய்தியாகிவிடும், நாங்கள் யாரையும் விட மாட்டோம்.

ஏனெனில் இது ஒரு பொது சுகாதார முன்னுரிமை. பொது சுகாதாரம் எங்கள் முன்னுரிமை. மாண்புமிகு முதல்வர் (நவீன் பட்நாய்க்) 10 நாட்கள் ‘மாஸ்க் அபியான்'-க்கு அழைப்பு விடுத்துள்ளார், அது சென்று கொண்டிருக்கிறது" என போலீஸ் சூப்பிரண்டு கன்வர் விஷால் சிங் தெரிவித்துள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு முயற்சியாக ‘மாஸ்க் அபியான்'-ஐ மாநிலத்தில் துவங்கி வைத்தார். இதன்படி விதி மீறல்களில் ஈடுப்படுவோருக்கு முதல் இரு தடவை ரூ.2,000மும், அடுத்தடுத்த மீறல்களுக்கு ரூ.5,000மும் அபராதமாக ஒடிசாவில் விதிக்கப்பட்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Puri Police Fine Traffic Constable Rs 2000 For Not Wearing Mask.
Story first published: Friday, April 30, 2021, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X