"எனக்கு ஓட்டு போட்டால் அபராதம் செலுத்த தேவையில்லை" - பாஜக வேட்பாளர் அடேடா அறிவிப்பு!!!

அபராதம் கட்ட வேண்டாம் என்றால் எனக்கு வாக்களியுங்கள் என பாஜக வேட்பாளர் ஒருவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவந்தது.

இந்த சட்டம் புதிதாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருந்தாலும், மக்களை களோபரத்தில் ஆழ்த்தும் வகையில் உச்சபட்ச அபராதம் அமைந்துள்ளது. இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் முதல் எதிர்கட்சியினர் வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு விடாப்பிடியாக அந்த சட்டத்தை நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அமலுக்குக் கொண்டு வந்தது.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தின் பாஜக வேட்பாளரான துதாரம் பிஷோனி, தனக்கு வாக்களித்தால் அதிகபட்ச அபராதத்தை நீங்கள் செலுத்த தேவையிருக்காது என தெரிவித்துள்ளார். வேட்பாளரின் இந்த பேச்சு தற்போது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் வருகின்ற 21ம் தேதி அம்மாநிலத்தின் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அந்த மாநிலம் முழுவதும் தேர்தல் விழா பூண்டுள்ளது. இதனால், மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களுக்கான திட்டங்களை வாய்மொழியாக அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், வருகின்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக வேட்பாளர் இந்த வாக்குறுதியை அறிவித்துள்ளார். அவர் இந்தி மொழியில் பேசிய அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வீடியோவில் அவர் கூறியதாவது, "என்னை நீங்கள் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுத்தால் அதிகபட்ச அபராதம், போதை பொருள், உங்கள் மகன் மற்றும் மகள்களின் படிப்பு போன்றவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது" என்றார்.

வேட்பாளரின் இந்த வாக்குறுதி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமின்றி ஆட்டோ செய்தித்துறையின் ஹாட் டாபிக்காகவும் மாறியுள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி அறிமுகமான புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலே காணப்படுகின்றது.

இதற்கு, பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ள அபராதமே முக்கிய காரணமாக இருக்கின்றது. சில நேரங்களில் இந்த புதிய விதியின்மூலம் விதிக்கப்படும் அபராதம், வாகனங்களின் விலையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸாரிடையே வாக்கும் வாதம் ஏற்படும் சூழல் நிலவுகின்றது. அதேசமயம், பெங்களூரு போன்ற ஒரு சில நகரங்களின் போலீஸார், தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு தனியாக அபராதத்தை விதித்து வருகின்றனர்.

சூழ்நிலை இவ்வாறு பல்வேறு சிக்கலைச் சந்தித்து வரும்நிலையில், எந்த கட்சியினர், புதிய அபராத திட்டத்தைக் கொண்டுவந்ததோ, அதே கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு வாக்குறுதி அளித்திருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2019, 11:02 [IST]
English summary
Politician Says He Will Stop Collection Of Fines If Elected. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+