உலகையே மிரள விட்ட அம்பாஸிடரின் வாரிசு... 34 கிமீ மைலேஜ்.... ஆனா தரமட்ட ரேட்ல வித்து தள்ளீட்டு இருக்காங்க...

இந்தியாவில் செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுக்க இதுதான் நிலைமை. செடான் ரக கார்களுக்கு பதிலாக தற்போது எஸ்யூவி ரக கார்கள் (SUV Cars) சந்தையை ஆக்கிரமித்து விட்டன.

ஆனால் ஒரே ஒரு செடான் ரக கார் மட்டும் விற்பனையில் இன்னும் பல்வேறு சாதனைகளை படைத்து கொண்டுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும். கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டில் (2025 ஏப்ரல் 1 - 2026 மார்ச் 31), இந்தியாவில் அதிகமாக விற்பனையான கார் என்ற சாதனையை மாருதி சுஸுகி டிசையர் படைத்துள்ள தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

Maruti Suzuki Dzire

இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி பார்த்தால், இந்திய சந்தையில் கடந்த 2025-26 நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 2.30 லட்சம் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 19,167 மாருதி சுஸுகி டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன.

இதன் மூலம் கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையான கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி டிசையர் பெற்றுள்ளது. செடான் ரகத்தை சேர்ந்த ஒரு கார் இந்த சாதனையை படைத்திருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

Maruti Suzuki Dzire

இந்தியாவில் கடந்த 2025-26 நிதியாண்டில் எஸ்யூவி ரக கார்களின் மார்க்கெட் ஷேர் 66 சதவீதம் ஆகும். அதாவது 100 கார்கள் விற்பனையாகியுள்ளது என்றால், அதில் 66 கார்கள் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான். எஸ்யூவி ரக கார்களின் ஆதிக்கம் எந்த அளவிற்கு உள்ளது? என்பதற்கு இந்த புள்ளி விபரம் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

அப்படிப்பட்ட ஒரு சந்தையில் செடான் ரக கார் ஒன்று, எஸ்யூவி ரக கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 மகுடத்தை சூடியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஒரே ஒரு செடான் ரக கார் என்றால், அது டிசையர்தான்.

முன்பு மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) செடான் ரக காரையும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. ஒரு பக்கம் சியாஸ் கார் மாருதி சுஸுகி நிறுவனத்தை கை விட்டு விட்டாலும் கூட, மறுபக்கம் டிசையர் கார் மாருதி சுஸுகி நிறுவனத்தை தாங்கி பிடித்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் பாதுகாப்பு. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனையில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) வாங்கிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமை, டிசையருக்கு உண்டு.

வலிமையான ஹார்டெக்ட் பிளாட்பார்ம் (Heartect Platform) அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி டிசையர் காரில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

அத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், கீலெஸ் எண்ட்ரி, அடுத்த தலைமுறை சுஸுகி கனெக்ட் கனெக்டட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி டிசையர் கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி டிசையர் கார் வெற்றிகரமான தயாரிப்பாக இருந்து வருவதற்கு மற்றொரு காரணம் அதன் மைலேஜ் ஆகும். இதன் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 24.79 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக உள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் 25.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.

இந்த வரிசையில் சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 33.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. இவை அனைத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மாருதி சுஸுகி டிசையர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.26 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் மாருதி சுஸுகி டிசையர் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.31 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுஸுகி டிசையர் கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) காருக்கு பிறகு, இந்தியா கண்ட மிகவும் வெற்றிகரமான செடான் ரக காராக மாருதி சுஸுகி டிசையர் திகழ்கிறது. இந்திய சந்தையில் ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura), ஹோண்டா அமேஸ் (Honda Amaze) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மாருதி சுஸுகி டிசையர் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 3, 2026, 15:53 [IST]
English summary
Maruti suzuki dzire sales report financial year 2025 26 2 30 lakh units sold
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+