மஹிந்திரா ஸ்கார்பியோவை விட 4 லட்சம் குறைவான விலையில் 7 சீட்டர் கார்! இந்தியாவை மிரள விட போகும் மாருதி சுஸுகி!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் அதிகமாக விற்பனையாகி வரும் எம்பிவி ரக கார் என்ற பெருமையை, மாருதி சுஸுகி எர்டிகா தன்வசம் வைத்துள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 18 ஆயிரம் மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன. ஆனால் இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனம் விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக எர்டிகா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனை, மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்த புதிய வெர்ஷன் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
வசதிகள் (Features): தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரில் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் கீ உடன் இன்ஜின் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, பிஎம் 2.5 ஃபில்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இவற்றுடன் கூடுதலாக பல்வேறு புதிய வசதிகள் எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது இருப்பதை காட்டிலும் அளவில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளை எல்லாம் இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பு வசதிகள் (Safety Features): தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகளையும், மாருதி சுஸுகி எர்டிகா கொண்டுள்ளது.
மேலும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளும், மாருதி சுஸுகி எர்டிகா காரில் வழங்கப்படுகின்றன. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இவற்றுடன் இன்னும் கூடுதலான பல்வேறு பாதுகாப்பு வசதிகளை நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
டிசைன் (Design): மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் புதிய டெயில்லைட்களை எதிர்பார்க்கலாம். அத்துடன் ரீ-டிசைன் செய்யப்பட்ட க்ரில் அமைப்பு மற்றும் பம்பர்கள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய கலர் ஆப்ஷனைகளையும் (Colour Options), வாடிக்கையாளர்களால் எதிர்பார்க்க முடியும்.
இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options): ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள்தான், மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும்.
இதில், சிஎன்ஜி இன்ஜினின் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரில், பூட் பகுதியில் சிஎன்ஜி டேங்க் வழங்கப்படுகிறது. இதனால் பின் பகுதியில் லக்கேஜ்களை அதிக அளவில் கொண்டு செல்வதில் சிரமங்கள் உள்ளன.
ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், பாடிக்கு (Body) கீழே சிஎன்ஜி டேங்க் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும்பட்சத்தில், மாருதி சுஸுகி எர்டிகா காரின் பூட் ஸ்பேஸ் (Boot Space) அதிகரிக்கும். எனவே அதிக அளவிலான லக்கேஜ்களை சிரமம் இல்லாமல் எடுத்து செல்லலாம்.
விலை (Price): தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. இது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) காரின் ஆரம்ப நிலை 7 சீட்டர் வேரியண்ட்டின் விலையை விட 4.20 லட்ச ரூபாய் குறைவாகும். மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை 7 சீட்டர் வேரியண்ட்டின் விலை 13 லட்ச ரூபாயாக உள்ளது.
அதாவது மாருதி சுஸுகி எர்டிகா தற்போதே விலை குறைவான கார்களில் ஒன்றாகதான் உள்ளது. இருப்பினும் பல்வேறு அப்டேட் செய்யப்படும் காரணத்தால், மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது சிறிய அளவிலான விலை உயர்வாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில், அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். சிறப்பான மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு போன்றவை எல்லாம் இதன் ப்ளஸ் பாயிண்ட்கள் ஆகும். முன்னதாக இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








