இன்னோவா க்ரிஸ்ட்டாவை விட 6.18 லட்சம் குறைவான விலையில் 9 சீட்டர் கார்! மார்க்கெட்டை மிரள விட்ட இந்திய தயாரிப்பு
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் (Gear Box Option) கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடையாது.

இருப்பினும் 9 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என பல்வேறு வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது 7 பேர் பயணம் செய்ய கூடிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை விட 6.18 லட்ச ரூபாய் குறைவு ஆகும்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19.18 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17 லட்ச ரூபாயாக உள்ளது. மறுபக்கம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை போல் அல்லாமல், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் உடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் வசதிகளும் அதிகம்.
இதில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் ஆரம்ப விலை 13.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 24.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே மஹிந்திரா மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால் இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதமும் விதிவிலக்கு அல்ல. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக (கிளாசிக் + என்) 14,578 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக வெறும் 13,913 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 665 மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனையில் 4.78 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars March 2026) 10வது மற்றும் கடைசி இடத்தையும் மஹிந்திரா ஸ்கார்பியோ பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 9 இடங்களில் மாருதி சுஸுகி டிசையர், டாடா பன்ச், டாடா நெக்ஸான், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி எர்டிகா, மாருதி சுஸுகி வேகன் ஆர், மாருதி சுஸுகி பலேனோ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகிய கார்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட, அதே நேரத்தில் அதிக வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களை பெற்றுள்ள ஒரு காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ மிகவும் ஏற்றது. அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பது இதன் மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








