ஆல்டோ விலையில் களமிறங்கிய புது கார்! சிங்கிள் சார்ஜில் 470 கிமீ ஓடும்! தனி ஆளா மார்க்கெட்டை வளச்சு போட்றுச்சு!

இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது டாடா பன்ச் (Tata Punch) ஆகும். டாடா பன்ச் கார், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளது.

இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதமும், டாடா பன்ச் கார் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது. மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

Tata Punch EV Facelift

இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 20,977 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 17,714 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 3,263 டாடா பன்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் டாடா பன்ச் கார் விற்பனையில் 18.42 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars March 2026), டாடா பன்ச் 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

Tata Punch Airbags

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) முதல் இடத்தில் உள்ளது. டாடா பன்ச் கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் இங்கே கூறியுள்ள அனைத்துமே இந்த 2 வெர்ஷன்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் 2 வெர்ஷன்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்களையும், வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா பன்ச் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஜனவரி மாதமும், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த பிப்ரவரி மாதமும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த 2 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் ஏராளமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே டாடா பன்ச் காரின் விற்பனை தற்போது வெகுவாக உயர்ந்துள்ளது. டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 5.64 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் டாப் வேரியண்ட் கிட்டத்தட்ட இதே விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை 5.45 லட்ச ரூபாய் ஆகும்.

அதே நேரத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலையும் கூட வெறும் 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதுவே பாஸ் (BAAS - Battery As A Service) முறையை தேர்வு செய்தால், இதன் விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக குறைந்து விடும். ஆனால் பாஸ் முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், கூல்டு க்ளவ் பாக்ஸ், ரியர் ஏசி வெண்ட்கள், 6 ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.

இதில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் 30 kWh மற்றும் 40 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுகின்றன. இதில், 40 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 468 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம், டாடா பன்ச் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும். ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலும் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 5, 2026, 13:58 [IST]
English summary
Tata punch sales report march 2026 18 per cent growth
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+