ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

இதுவரை எந்த ஒரு நடிகரும் கொடுக்காத மிக அதிகப்படியான விலையில், தனது ஜிம் பயிற்சியாளருக்கு பாகுபலி பிரபாஸ் சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பெரும்பாலான உடற்பயிற்சி கூடங்கள் (Gym) மூடப்பட்டுள்ளன. இதனால் உடற்பயிற்சி கூட உரிமையாளர்களும், பயிற்சியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒரே ஒரு ஜிம் பயிற்சியாளர் மட்டும் தற்போது சந்தோஷத்தில் திக்கு முக்காடி போயுள்ளார்.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது இந்த சந்தோஷத்திற்கு காரணம் கிடையாது. மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்று பரிசாக கிடைத்திருப்பதுதான் இந்த சந்தோஷத்திற்கான காரணம். பாகுபலி நாயகன் பிரபாஸிடம் இருந்து அவருக்கு இந்த கார் கிடைத்திருக்கிறது.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

நடிகர் பிரபாஸின் ஜிம் பயிற்சியாளரான லக்ஸ்மன் ரெட்டிதான் அந்த அதிர்ஷ்டசாலி. இவருக்கு தற்போது மிக விலை உயர்ந்த ரேஞ்ச் ரோவர் வெளார் (Range Rover Velar) காரை பிரபாஸ் பரிசாக வழங்கியுள்ளார். இது சொகுசு எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 73.30 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

ஆன் ரோடு விலை சுமார் 89 லட்ச ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆன் ரோடு விலையை உறுதி செய்ய முடியவில்லை. இருந்தாலும் இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு நடிகர்/நடிகையும், தங்களது ஜிம் பயிற்சியாளர்கள் அல்லது ஊழியர்களுக்கு வழங்கிய மிக விலை உயர்ந்த காராக இது இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

திரைப்பட நடிகர், நடிகைகள் தங்களது பணியாளர்கள் அல்லது இயக்குனர்கள் போன்றவர்களுக்கு கார்களை பரிசாக வழங்குவது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுதான். பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் கூட ஒரு முறை தனது ஒப்பனை கலைஞருக்கு ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

பிரபாஸ் தற்போது தனது ஜிம் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் வெளார் எஸ்யூவி, ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இதில், ஆடி க்யூ 7 கார், 7 சீட்டர் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் வெளார், ஜிஎல்இ ஆகிய கார்கள் 5 சீட்டர் மாடல்களாக விற்பனை செய்யப்படுகின்றன.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

இந்திய சந்தையில் தற்போதைக்கு பெட்ரோல் இன்ஜின் கார்களை மட்டும் விற்பனை செய்வது என லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ளது. எனவே ரேஞ்ச் ரோவர் வெளார் கார், 2 லிட்டர்-4 சிலிண்டர் டர்போர்சார்ஜ்டு பெட்ரோல் என ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 365 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

ரேஞ்ச் ரோவர் வெளார் காரில், பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளுக்கு பஞ்சமில்லை. பாதுகாப்பு வசதிகள் என பார்த்தால், 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர டிராக்ஸன் கண்ட்ரோல், ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில் ஹோல்டு, ஹில் டெசண்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

ஜிம் பயிற்சியாளருக்கு சொகுசு காரை வழங்கிய பாகுபலி பிரபாஸ்... இதுவரை எந்த நடிகரும் கொடுக்காத விலை...

இந்த காரின் ஓட்டுனர் மற்றும் முன்பக்க பயணி இருக்கையை 14 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். பனரோமிக் சன்ரூஃப், ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் பார்க்கிங் அஸிஸ்ட் ஆகிய வசதிகளையும் ரேஞ்ச் ரோவர் வெளார் பெற்றுள்ளது. இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் வெளார் கார் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

Image Courtesy: Team Prabhas Sena

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prabhas Gifts Gym Trainer Laxman Reddy Range Rover Velar Luxury SUV. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X