குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

பிரதமர் நரேந்திர மோடி இந்திய தயாரிப்பு வாகனமான மஹிந்திரா தாரில் குஜராத் மக்களை சந்தித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் சிலவற்றை பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளதை இதற்குமுன் பலமுறை பார்த்துள்ளோம். இந்த வகையில் சமீபத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் குஜராத் சென்றிருந்தார்.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

குஜராத் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விதமாக திறந்து வைத்தார். முன்னதாக குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து வதோதாராவில் உள்ளரங்கில் கூடியிருந்த மக்கள் முன் உரையாற்றுவதற்காக பிரதமர் மஹிந்திரா தார் வாகனத்தில் அரங்கிற்கு வந்தார்.

இது தொடர்பாக பிரித்தி காந்தி என்பவர் தனது டுவிட்டரில் பதிவிட்ட வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். முற்றிலுமாக இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்படும் மஹிந்திரா தார் ஆஃப்-ரோடு வாகனத்தில் பிரதமர் வந்திறங்கியது ஆட்டோமொபைல் பிரியர்களை பரவசப்படுத்தியது. இந்த குறுகிய பயணத்தில் பிரதமர் பயன்படுத்தியது, தாரின் சாஃப்ட்-டாப் வெர்சனாகும்.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

அதாவது இந்த வேரியண்ட்டின் மேற்கூரையை தேவைக்கேற்ப நீக்கியும் கொள்ளலாம். இதன்படி இந்த குறிப்பிட்ட தார் வாகனத்தின் மேற்கூரை நீக்கப்பட்டிருந்ததால், பிரதமர் வாகனத்தில் நின்றவாறு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தவாறு அரங்கிற்குள் பிரவேசித்தார். இந்த குறிப்பிட்ட தார் வாகனம் ஏற்கனவே வெள்ளை நிற நம்பர் ப்ளேட்டுடன் இருந்ததால், அநேகமாக இது ஏதேனும் ஒரு பாஜக நிர்வாகி அல்லது அரசாங்க அதிகாரியின் வாகனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

இந்திய தயாரிப்பு வாகனமான மஹிந்திரா தாரில் பிரதமர் மோடி பயணிப்பது இது முதல்முறையல்ல. இதற்குமுன், 4 மாநில சட்டச்சபை தேர்தல்களில் பாஜக கட்சியினர் வெற்றி பெற்றிருந்ததை முன்னிட்டு கடந்த மார்ச் மாதத்தில் குஜராத் சென்றிருந்த போதும் வெறும் 2 நாட்களில் 3 முறை இவ்வாறு மேற்கூரை நீக்கப்பட்ட தார் வாகனங்களில் பொது சாலைகளில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் காட்சி தந்திருந்தார்.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

இது அந்தசமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து, தங்களது நிறுவனத்தின் நம்பகமான தார் வாகனங்களை அணிவகுப்புகளுக்கு பயன்படுத்தியமைக்காக பிரதமருக்கு மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நன்றி கூறியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 2 நாள் குஜராத் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி இன்று (ஜூன் 20) சில பல திட்டங்களை துவங்கி வைப்பதற்காக கர்நாடகா மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

இந்தியாவில் சாஃப்ட்-டாப் & ஹார்ட்-டாப் என இரு விதமான வேரியண்ட்களில் மஹிந்திரா தார் வாகனம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஹார்ட்-டாப் வேரியண்ட்டானது பெயருக்கேற்ப முற்றிலுமாக மேற்கூரையை நீக்க இயலாதது ஆகும். அத்துடன், அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்ற ஏஎக்ஸ் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற எல்.எக்ஸ் என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளிலும் தார் விற்பனைக்கு கிடைக்கிறது.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

இந்த இரு ட்ரிம் நிலைகளை சாஃப்ட்-டாப் மற்றும் ஹார்ட்-டாப் என இரு வேரியண்ட்களிலும் வாங்கலாம். இதில் எந்த ட்ரிம் நிலையை தற்போது குஜராத் பயணத்தில் பிரதமர் பயன்படுத்தினார் என்பது உறுதியாக தெரியவில்லை. தாரில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறன் வரையிலும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறன் வரையிலும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இந்த இரு என்ஜின்களுடனும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

குஜராத் சென்றாலே தார் வாகனம்தான் போல!! பிரதமர் மோடியும், மஹிந்திரா தார் உடனான அவரது பிரியமும்...

தார் எஸ்யூவி வாகனத்தில் வேரியண்ட்டை பொறுத்து எல்இடி டிஆர்எல்-கள், அலாய் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், நேரெதிர் பார்க்கப்பட்ட பின் இருக்கைகள், ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை கொக்கிகள், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியுடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு உள்ளிட்டவற்றை பெறலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prime minister narendra modi rides thar suv in gujarat details
Story first published: Monday, June 20, 2022, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X