Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசைவ உணவை வெளுத்து கட்டி ராயல் என்பீல்டு பைக் வென்ற அதிர்ஷ்டசாலி... போட்டியில் பங்கேற்க இவ்வளவுதான் செலவாகுமா?
அசைவ உணவு சாப்பிடும் போட்டியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலி ஒருவர், புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள உணவகம் ஒன்று தனது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான போட்டி ஒன்றை தற்போது அறிவித்துள்ளது. புனே நகரின் வட்கான் மாவல் பகுதியில் அமைந்துள்ள சிவ்ராஜ் ஹோட்டல்தான், வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளதன் மூலம் தற்போது நாடு முழுக்க பிரபலமாகியுள்ளது.

உணவு சாப்பிடும் போட்டியின் மூலம் ராயல் என்பீல்டு பைக்கை வெல்லும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு தற்போது இந்த உணவகம் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இந்தியாவில் உணவகங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சிவ்ராஜ் ஹோட்டல் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்பவர்கள், அசைவ தாலியை 60 நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். போட்டியில் வெல்பவர்களுக்கு 1.65 லட்ச ரூபாய் மதிப்புள்ள ராயல் என்பீல்டு பைக் பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ஒரு பிளேட்டில் மட்டன், மீன் உள்பட 4 கிலோ அசைவ உணவுகள் வழங்கப்படும்.

இந்த பிளேட்டில் 12 வகையான உணவுகள் இடம்பெற்றிருக்கும். இதில், ஃப்ரைடு சுர்மாய், ஃப்ரைடு ஃபிஷ், சிக்கன் தந்தூரி, ட்ரை மட்டன், க்ரே மட்டன், சிக்கன் மசாலா ஆகியவை அடங்கும். ஒரு தாலியின் விலை 2,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தொடர்பான பேனர்கள் சிவ்ராஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளன.

சிவ்ராஜ் ஹோட்டலின் உரிமையாளரான அதுல் வைக்கர், உணவகத்தின் வராண்டாவில் 5 புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்குகளை நிறுத்தியுள்ளார். இந்த போட்டிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், போட்டியில் பங்கேற்பதற்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வமுடன் உணவத்திற்கு வருவதாகவும் அதுல் வைக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று யாராவது ராயல் என்பீல்டு பைக்கை வென்றுள்ளார்களா? என தற்போது நீங்கள் யோசிக்கலாம். ஆம், மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சோம்நாத் பவார் என்பவர் இந்த போட்டியில் வெற்றி பெற்று புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக்கை வீட்டிற்கு ஓட்டி சென்றுள்ளார்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி கொண்டு சிவ்ராஜ் ஹோட்டல் இந்த போட்டியை அறிவித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தை பொறுத்தவரை தற்போது இந்திய சந்தையில் புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக உள்ளது.

கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில், புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுடன் போட்டியிட்டு வரும் மீட்டியோர் 350 பைக்கிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கை களமிறக்க ராயல் என்பீல்டு தயாராகி வருகிறது.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மிகவும் பிரபலமான மோட்டார்சைக்கிளாக உள்ளது. ஆனால் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 உள்ளிட்ட புதுவரவுகளின் மூலம் போட்டி அதிகரித்து வருவதால், கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டின் ஏதேனும் ஒரு சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.