Just In
- 50 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு ஆள் உயரத்திற்கு அபராத ரசீது கொடுத்த போலீஸ்... கட்ட வேண்டிய தொகையை பார்த்து ஆடிப்போன இளைஞர்...
இளைஞர் ஒருவருக்கு 5.5 அடி நீளத்திற்கு காவல் துறையினர் அபராத ரசீது வழங்கியுள்ளனர். செலுத்த வேண்டிய தொகையை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மீறுவதன் காரணமாகவே, இந்தியாவில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. எனவே போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அங்கு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி கோரமங்களா முதல் பிளாக்கில், கடந்த புதன்கிழமையன்று அடுகொடி போக்குவரத்து காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்த சூழலில், அதனை மீறி சென்றார். இதற்காக காவல் துறையினர் அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில், அவர் பெயர் ராஜேஷ் குமார் என்பது தெரியவந்தது. 25 வயதாகும் அவர் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வருகிறார்.

ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ராஜேஷ் குமார் வேலை செய்து கொண்டுள்ளார். எனவே எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து தினமும் ஒயிட்பீல்டு வரையில் அவர் பைக்கில் சென்று வருவது வழக்கம். ஆனால் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் அவர் மதிக்காமல், இரு சக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார்.

விசாரணையில் கடந்த புதன் கிழமை மட்டும் அவர் 6 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்தது. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் 3 முறை மீறி சென்றிருந்த அவர், ஒரு வழிப்பாதை கட்டுப்பாடுகளை 2 முறை மீறியிருந்தார். இதுதவிர அன்றைய தினம் அவரது பைக்கில் ரியர் வியூ மிரர் இல்லை.

ஆக மொத்தம் புதன் கிழமை காவல் துறையினர் நிறுத்திய சமயத்திற்குள்ளாக 6 முறை அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி விட்டார். தொடர் விசாரணையில் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, 94 முறை அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பது தெரியவந்தது.

ஆனால் இந்த விதிமுறை மீறல்கள் எதற்கும் அவர் அபராதம் செலுத்தவில்லை. புதன் கிழமை காவல் துறை அதிகாரிகள் நிறுத்திய சமயத்தில் 1, அன்றைய தினத்தில் அதற்கு முன்பாக 6, 2019ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து 94 என மொத்தம் 101 முறை அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளார். இந்த விதிமுறை மீறல்கள் 2019 செப்டம்பர் 12ம் தேதியில் இருந்து கடந்த ஆகஸ்ட் 26 (புதன்) வரை செய்யப்பட்டுள்ளன.

வெறும் 11 மாதங்களில் 101 முறை அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருப்பதை கண்டு காவல் துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்து விட்டனர். தற்போது பெரு நகரங்களில் முக்கியமான இடங்களில் கேமரா நிறுவப்பட்டு, வாகன ஓட்டிகளின் செயல்பாடுகள் கண்காணிப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதில், வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, அதன் உரிமையாளருக்கு எதிராக அபராத ரசீதுகளை காவல் துறையினர் உருவாக்குகின்றனர். இப்படி அபராத ரசீதுகள் மொத்தமாக சேர்ந்து விடும் பட்சத்தில், இதுபோன்றதொரு இக்கட்டான சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் சிக்கி கொள்கின்றனர்.

இந்த 11 மாதங்களில் ராஜேஷ் குமார் 41 முறை தலை கவசம் அணியாமல் சென்றுள்ளார். அவரது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் 28 முறை தலை கவசம் அணியாமல் இருந்துள்ளனர். மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டியபடியே செல்போனில் பேசிய குற்றத்தை ராஜேஷ் குமார் 10 முறை செய்துள்ளார்.

அத்துடன் 'நோ எண்ட்ரி' விதிமுறையை அவர் 6 முறை மீறியுள்ளார். மேலும் போக்குவரத்து சிக்னலை 5 முறை மீறி சென்றுள்ளார். இது தவிர லேன் ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளையும் அவர் 5 முறை மீறியுள்ளார். இதுபோதாதென்று தவறான இடங்களில் 3 முறை வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதுதவிர மேலும் 3 மற்ற போக்குவரத்து விதிமீறல்களை அவர் செய்துள்ளார். ஆக மொத்தம் 101 விதிமீறல்கள் வருகின்றன.

இதற்கு எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமாக 57,200 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என காவல் துறையினர் கூறியுள்ளனர். அவர் செய்த விதிமீறல்களை குறிப்பிட்டு, 5.5 அடி நீளத்திற்கு அபராத ரசீது வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைப்பார்த்து ராஜேஷ் குமார் அதிர்ச்சியில் உறைந்திருப்பார்.

நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்துவதற்கு ராஜேஷ் குமார் 3 நாட்கள் அவகாசம் கேட்டு காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இதனை செய்யும்பட்சத்தில், பெங்களூர் நகரில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக அதிக அபராதம் செலுத்திய நபர்களில் ஒருவராக உருவெடுப்பார்.

தற்போது ராஜேஷ் குமாரின் ராயல் என்பீல்டு புல்லட்டை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வைத்துள்ளனர். கடந்த புதன் கிழமை அவர் சிக்கிய உடனேயே, இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் காவல் துறையினர் ஆலோசனை செய்தனர். இதன்பின்பு அவரது ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை பறிமுதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

நிலுவையில் உள்ள அபராத தொகைகளை ராஜேஷ் குமார் உரிய முறையில் செலுத்தி விட்டால், அவரது பைக் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ''வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்லும்போதும், திரும்பி வரும்போதும்தான் ராஜேஷ் குமார் பெரும்பாலான தவறுகளை செய்துள்ளார்.

60க்கும் மேற்பட்ட விதிமுறைகள் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இந்த சமயத்தில் சாலையில் காவல் துறையினர் அதிக அளவில் சோதனை செய்யவில்லை. எனவே ராஜேஷ் குமார் அலட்சியமாக தலை கவசம் அணியாமலேயே பயணம் செய்து வந்துள்ளார்.

தலை கவசம் அணியாதது தொடர்பாக மட்டும் அவர் மீது 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன'' என்றனர். சாலையில் காவல் துறையினர்தான் வாகனங்களை சோதனை செய்யவில்லையே என்ற அலட்சியத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சம்பவம் ஒரு முன் உதாரணம். இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.