Just In
- 50 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டில் இருந்து ஸ்டேஷனுக்கு சைக்கிளில் வரும் போலீஸ்காரர்... எவ்வளவு தூரம்னு தெரிஞ்சா அசந்திருவீங்க
தமிழகத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் தினமும் சைக்கிளில் காவல் நிலையம் சென்று வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது. கார் அல்லது டூவீலர் என ஏதேனும் ஒரு வாகனம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது. ஒரு சில வீடுகளில் தற்போது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒரு வாகனம் இருப்பதை காண முடிகிறது.

வாகனங்களின் எண்ணிக்கை இப்படி அதிகரித்து கொண்டே செல்வது, சுற்றுச்சூழலுக்கு சற்றும் உகந்ததல்ல. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் இந்தியாவின் காற்று மாசுபாடு பிரச்னை மிக முக்கியமான காரணம். காற்று மாசுபாடு பிரச்னை காரணமாக உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகமாக உள்ளது.

மோட்டார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பால், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளையும் இந்திய மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் உடல் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கறை கொண்ட ஒரு சிலர் தங்கள் போக்குவரத்து முறைகளில் தற்போது மாற்றங்களை செய்து வருகின்றனர்.

அதாவது பழையபடி அவர்கள் சைக்கிளை பயன்படுத்துவதை அதிகரித்து வருகின்றனர். இதற்கு மோகன் ஒரு சிறந்த உதாரணம். 32 வயதாகும் இவர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிளியனூர் காவல் நிலையத்தில், கிரேடு I போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேலை செய்து வருகிறார். மிகவும் எளிமையான சைக்கிள்தான், போக்குவரத்திற்கான அவரது தேர்வு.

இவர் 2009 பேட்ச் போலீஸ் கான்டஸ்டபிள் ஆவார். கூட்டேரிப்பட்டு அருகே உள்ள நல்லமூர்தான் மோகனுக்கு சொந்த ஊர். தினமும் தனது பணியிடத்திற்கு செல்வதற்காக மோகன் சுமார் 30 கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டி வருகிறார். சைக்கிள் ஓட்டுவதால், உடல் நலம் பாதுகாக்கப்படும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் நன்மைகள் கிடைக்கும்.

ஆனால் நேரமின்மை மற்றும் கால தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக சைக்கிள் பயன்படுத்துவதில் ஒரு சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக சிலர் புலம்புவதை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில், தனது பணியிடத்திற்கு செல்வதற்காக தினமும் சுமார் 30 கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டும் மோகன் வித்தியாசமானவராகதான் தெரிகிறார்.

வேலைக்கு செல்லும்போது காலை 6.30 மணிக்கெல்லாம் மோகன் வீட்டில் இருந்து புறப்பட்டு விடுவார். சுமார் ஒரு மணி நேர பயணத்தில், அதாவது காலை 7.30 மணிக்கெல்லாம் அவர் காவல் நிலையத்திற்கு சென்று விடுவார். கடந்த சில ஆண்டுகளாகவே மோகன் இதனை தொடர்ச்சியாக செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மோகன் சைக்கிளை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்திற்கு சென்று வருவதற்கு மட்டுமின்றி, காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் கூட மோகன் சைக்கிளைதான் பயன்படுத்தி வருகிறார். 'ஃபிட்' ஆக இருக்க வேண்டும் என்பதற்காக மோகன் சைக்கிள் பயன்பாட்டில் ஆர்வம் உள்ளவராக இருந்து வருகிறார்.

பொதுவாக காவல் துறையினர் தினமும் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. காவல் துறையினரின் வாழ்க்கை முறை, மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இது போன்ற பிரச்னைகளை தவிர்த்து, நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்காக, சைக்கிளை பயன்படுத்தி வருவதாக மோகன் கூறியுள்ளார்.

உண்மையில் சைக்கிள் என்பது மிகவும் எளிமையான மற்றும் சுற்றுச்சூழல், உடல் நலத்திற்கு உகந்த ஒரு போக்குவரத்து முறை. நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி, பலர் சைக்கிள் பயன்பாட்டை தவிர்த்து வரும் நிலையில், நீண்ட காலமாக தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வரும் மோகன் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். இதுகுறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து பொருளாதாரத்தை பாதுகாக்கவும் தற்போது ஒரு சில ஐரோப்பிய நாடுகளே சைக்கிள்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முடிந்தவரையில் அனைவரும் சைக்கிள் ஓட்ட முயற்சி செய்வது நல்லது. இது மருத்துவமனை செலவுகளை குறைக்க உதவி செய்வதுடன் மட்டுமல்லாது, வாகனங்களின் எரிபொருளுக்கு நீங்கள் செலவிடும் தொகையையும் குறைப்பதற்கு உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.