Just In
- 1 hr ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 1 hr ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
- 3 hrs ago
பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
- 3 hrs ago
இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
Don't Miss!
- Finance
கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..!
- News
விருந்து இல்லை;விழா இல்லை... எல்லா நாளும் அன்பும்-தொண்டும்... இது தியாகச்சுடர் சாந்தாவின் கதை..!
- Movies
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விஷயத்தை கேட்டதும் ஆடிப்போன ரசிகர்கள்... வலிமை படத்தில் தல அஜீத் ஓட்டும் பைக்கிற்கு பின்னால் இவ்ளோ மேட்டர் இருக்கா?
வலிமை திரைப்படத்தின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதில் தல அஜீத் ஓட்டும் பைக் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு கொண்டிருந்த தல அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பு, கொஞ்சம் நிறைவேறியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தில், அஜீத் பைக் ஓட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலை தளங்கள் அனைத்திலும், தற்போது அந்த புகைப்படம்தான் வேகமாக பரவி வருகிறது.

அஜீத் தனது திரைப்படங்களில், பைக் ஸ்டண்ட்களை அவரே செய்வார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வலிமை திரைப்படத்தின் புகைப்படத்தில், அஜீத் செய்துள்ளது வீலி (Wheelie) ஸ்டண்ட் ஆகும். பைக்கின் முன் பகுதியை, தரையில் இருந்து தூக்குவதுதான் பொதுவாக வீலி எனப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

தற்போது இந்த புகைப்படம் வேகமாக பரவி வரும் நிலையில், அஜீத் ஓட்டும் பைக்கின் பெயர் என்ன? அதன் விலை எவ்வளவு? என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது குறித்து இணையத்திலும் அதிகம் தேடி வருகின்றனர். அவர்களுக்காக, வலிமை படத்தின் புகைப்படத்தில் அஜீத் பயன்படுத்தியுள்ள பைக் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

அஜீத் ஓட்டும் பைக்கின் பெயர், எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 (MV Agusta Brutale 800) ஆகும். எம்வி அகுஸ்ட்டா என்பது இத்தாலியை சேர்ந்த பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றாகும். அந்நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றுதான் புருட்டேல் 800.

எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக், இந்திய சந்தையில் கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் 15.59 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில், எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது மிகவும் விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த பைக்கில் 798 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் 11,500 ஆர்பிஎம்மில் 110 பிஎஸ் பவரையும், 7,600 ஆர்பிஎம்மில் 83 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியது. இந்த மோட்டார்சைக்கிள் 175 கிலோ எடை கொண்டது. ஆனால் பின் நாட்களில், இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிளின் விற்பனை நிறுத்தப்பட்டது.

இத்தாலியை சேர்ந்த எம்வி அகுஸ்ட்டா நிறுவனமானது, மோட்டோராயல் கைனடிக் (MotoRoyale Kinetic) நிறுவனத்துடனான கூட்டணியின் கீழ்தான், இந்திய சந்தையில் வர்த்தக செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் மோட்டோராயல் கைனடிக் உடனான கூட்டணியை, கடந்த பிப்ரவரி மாதத்தில் எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் முறித்து கொண்டது.

இதன் காரணமாக இந்திய சந்தையில் இருந்து எம்வி அகுஸ்ட்டா தற்காலிகமாக வெளியேறியுள்ளது. இந்திய சந்தையை விட்டு தற்காலிகமாக வெளியேறும் வரையில், எம்வி அகுஸ்ட்டாவின் இந்திய சந்தைக்கான பைக்குகள், பிஎஸ்-4 விதிகளுக்கு மட்டுமே இணக்கமானதாக இருந்தன. ஆனால் இந்தியாவில் தற்போது மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிகள் அமலில் உள்ளன.

எனவே தனது தயாரிப்புகளை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தி இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்ய எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அனேகமாக அடுத்த ஆண்டு இது நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிஎஸ்-6 மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்திய சந்தையில் தன்னுடைய வர்த்தக செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்காக, புதிய பார்ட்னரை எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் தேடி வருகிறது. புதிய பார்ட்னர் உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கு எம்வி அகுஸ்ட்டா ஆர்வமாக உள்ளது. எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் பிஎஸ்-6 மாடல்கள், புதிய பார்ட்னர் உடனான கூட்டணியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி தற்போது வெளியாகியுள்ள வலிமை திரைப்படத்தின் புகைப்படத்தில் அஜீத் பயன்படுத்தியுள்ள எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக்கும் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படலாம். இந்த பைக் 2021ம் ஆண்டு மே மாதம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை மிகவும் அதிகம் என்பதால், அனைவராலும் இந்த பைக்கை சொந்தமாக்க முடியாது.

வலிமை திரைப்படத்தின் புகைப்படம் வெளியான பிறகு, அஜீத் ஓட்டும் பைக் என்பதால், எம்வி அகுஸ்ட்டா புருட்டேல் 800 பைக்கிற்கு அதிக 'டிமாண்ட்' ஏற்பட்டிருப்பதாக மீம்ஸ்களை காண முடிகிறது. ஆனால் அந்த பைக்கை வாங்கலாம் என இணையத்தில் தேடியவர்களுக்கு, அதன் விலையும், இந்தியாவில் தற்போது கிடைக்காது என்ற தகவலும் நிச்சயம் அதிர்ச்சியை அளித்திருக்கும்.