பார்த்துகுங்க மக்களே, நான் கார் வாங்கிட்டேன்... டிக் டாக் புகழ் ஜிபி முத்து நெகிழ்ச்சி!

'டிக்டாக் நண்பர்களே' என்ற வாக்கியம், இது ஒன்று தான் இவரது சொத்து. இதை தவிர்த்து தனது டிக்டாக் வீடியோவிற்கென பெரியதாக எதுவும் செய்ய மாட்டார். பேக் க்ரவுண்ட்டில் எந்தவொரு கிராஃபிக்ஸும் கிடையாது.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

இருப்பினும் பிரபலமாகி இருப்பவர் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்த்த இவர், டிக்டாக் நம் நாட்டில் பயன்பாட்டில் இருந்த சமயத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 40 வீடியோக்களை பதிவிடக்கூடியவர்.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

தச்சரான இவரது நையாண்டி கலந்த நெல்லை பேச்சு நிறைந்த வீடியோவை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

இதில் பெரிதும் மனம் உடைந்த போன ஜிபி முத்து, "டிக்டாக்கின் தடையை எடுங்கள் பிரதமர் அவர்களே" என்று கூட கெஞ்சியும் பார்த்தார், எதுவும் நடக்கவில்லை. அதன்பின்பு தான் ஜிபி முத்து, நமது முகத்திற்காக தான் கூடுகிறது இந்த கூட்டம், டிக்டாக்கிற்காக இல்லை என புரிந்து கொண்டார் போலும்.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

டிக்டாக்கில் செய்வதை போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராமிலும், யுடியூப்பிலும் பதிவிட துவங்கியவருக்கு எதிர்பார்த்ததை போல் ஆதரவு பெருகியது. யுடியுப்-இல், தனக்கு வந்த லெட்டர்களை படிப்பது போன்றதான இவரது கான்செப்ட் ரசிகர்களை மீண்டும் இவர் பக்கம் திரும்ப வைத்தது.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

அப்புறம் என்ன, இது யுடியுப் என்பதால் சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கை கூடியது. ஜிபி முத்து தற்போதே 3 லட்ச சப்ஸ்க்ரைபர்களை தாண்டிவிட்டார். இதில் சிறிது பணம் கிடைக்க வாய்ப்புண்டு.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

இவ்வாறான வீடியோக்களுடன் அவ்வப்போது தனியார் நிகழ்ச்சிகளிலும் தோன்றுகிறார். புது படங்களில் கூட நடித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. இவை எல்லாவற்றிலும் கிடைத்த பணத்தின் மூலம் தான் தற்போது தனது முதல் காரை வாங்கியுள்ளார் ஜிபி முத்து.

தனது பரம்பரையில் யாருமே கார் வாங்கியதில்லை என கூறி நெகிழ்ச்சியுடன் இந்த நிகழ்வையும் வீடியோவாக யுடியுப்-இல் பதிவிட்டுள்ளார். செகண்ட் ஹேண்ட் கார் தான் என்றாலும் இவர் கார் வாங்கியது தான் தற்சமயம் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடி கொண்டிருக்கிறது.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

தான் மட்டும் இதற்கு பணம் போடவில்லை, தனது நண்பரும் கொடுத்த பணத்தின் மூலமாக தான் மிகவும் கஷ்டப்பட்டு இந்த காரை வாங்கியுள்ளதாக கூறும் ஜிபி முத்து, ஆசிரமங்களுக்கு தனது குடும்பத்துடன் சென்று உணவு வழங்குவது உள்ளிட்டவற்றிகாக தான் இந்த கார் வாங்கியுள்ளதாக கூறி தனது குழந்தை மனதையும் காட்டியுள்ளார்.

இவருக்கு எப்படி இவ்ளோ காசு வந்தது!! யுடியுப்பில் வீடியோ போட்டே காரை வாங்கிய ஜிபி முத்து!

ஜிபி முத்து வாங்கியிருப்பது ஹூண்டாய் காராகும். இரண்டாவது கை காரான இதற்கு அவர் செலவு செய்த தொகை எதையும் தெரிவிக்கவில்லை. இந்த காரை வாங்குவதற்கு தனது மனைவி, குழந்தைகளின் நகைகளை விற்றுள்ளதாக ஜிபி முத்து கூறியுள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tiktok Famous GP Muthu Bought Second Hand Hyundai Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X