Just In
- 55 min ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 1 hr ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 2 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- News
''அப்துல்கலாமின் இளவல்.. பசுமைக்காவலர்''.. நடிகர் விவேக்குக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்!
- Sports
கண் அசைவிற்காக காத்திருக்கும் 3 பேர்.. "தமிழர்களை" புறக்கணிக்கும் தோனி.. நேற்று நடந்த பரபர சம்பவம்
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான பாலியல் நடைமுறைகள்... இந்தியாவிலுமா இப்படி நடக்குது?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓட்டுபோட ஊருக்கு போறீங்களா! டோல் கட்டணம் எவ்வளவு உயர்ந்திருக்குனு தெரிஞ்சுட்டு போங்க! சைலண்டா ஏத்திருக்காங்க!!
தமிழகத்தில் சத்தமே இல்லாமல் டோல்கேட் கட்டணம் உயர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 5 முதல் ரூ. 30 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் உரிமைதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே, சுங்கச்சாவடிகள் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றநிலையில் இந்த திடீர் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையுயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் சுங்கச்சாவடிகளின் கட்டணமும் தமிழகத்தில் உயர்த்தப்பட்டிருப்பது, மக்கள் மீது மேலும் சுமையை அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது.

சுங்கச்சாவடிகளே இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும் மற்றும் கட்டணத்தை பல மடங்கு குறைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகின்றது. இந்த மாதிரியான நிலையில் மத்திய பாஜக அரசும், தமிழக அதிமுக அரசும் விலைவாசிகளைத் தொடர்ச்சியாக உயர்த்திய வண்ணம் இருக்கின்றன.

அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்திருக்கின்றது. ஆகையால், இதுகுறித்த தகவல் அறியாத வாகன ஓட்டிகள் பலர் டோல்கேட் ஊழியர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீர் கட்டண உயர்வால் சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது. மத்திய அரசு டோல்கேட் கட்டணத்தை வசூலிப்பதற்காக அண்மையில் ஃபாஸ்டேக் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் டோல்கேட் கட்டணம் செலுத்துவது மிக எளிது. ரொக்கமாக அல்லாமல் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்ய இது உதவும்.

ஆகையால், ரொக்க பரிமாற்றத்தைப்போன்று இதில் நேர விரயம் ஏற்படாது. இதன்காரணத்தினாலேயே மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஃபாஸ்டேக்-கினை கட்டாயம் என அறிவித்திருக்கின்றது. தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் 93 சதவீத வாகனங்கள் இதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றன.

இதனை பெறாத வாகனங்களிடம் இருந்து இரு மடங்கு கூடுதலாக கட்டணத்தை வசூலிக்க அரசு உத்தரவிட்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தமிழகத்தில் புதிதாக சுங்கக் கட்டண உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

புதிய கட்டணம்:
கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களக்கு ரூ. 80 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த கட்டணத்திலேயே ரூ. 5 வரை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், புதிதாக ரூ. 85 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோன்று, இரண்டு அச்சுகள் கொண்ட கனரக வாகனம் மற்றும் பேருந்துகளுக்கு 270 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த 295 ரூபாய் கட்டணத்தில் ரூ. 20 உயர்த்தப்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து, மூன்று முதல் ஆறு அச்சுகள் கொண்ட கனரக வானங்களுக்கு 425 ரூபாய் வரை முன்னதாக வசூல் செய்யப்பட்டது. இதன் கட்டணம் ரூ. 25 வரை உயர்த்தப்பட்டிருக்க்கின்றது.
மேலும், ஏழு மற்றும் அதற்கு மேல் அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கான டோல் கட்டணத்தில் ரூ. 30 உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், 520 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 550 ரூபாயாக உயர்ந்திருக்கின்றது.