Just In
- 2 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரயில்வே க்ராஸிங்கில் பொறுமை இழந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ
ரயில்வே க்ராஸிங்கில் பொறுமை இழந்தால் என்ன நடக்கும்? என்பதை எடுத்துக்காட்டும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரயில்வே க்ராஸிங் பகுதிகளில் நாம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ரயில்வே க்ராஸிங்குகளில் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்றுள்ள போதிலும், பலர் இன்னமும் அஜாக்கிரதையாக நடந்து கொள்வது கவலையளிக்கிறது. இந்த வரிசையில் ரயில்வே க்ராஸிங்கில் நடைபெற்ற ஒரு விபத்தின் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் பொறுமையாக நடந்து கொள்ளாத காரணத்தால், இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ரயில் அப்பகுதியை கடக்கும் வரை, அவர் பொறுமையாக காத்திருக்கவில்லை. விரைவாக மறு பகுதிக்கு செல்ல வேண்டும் என நினைத்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து அவர் தப்பி விட்டார்.

இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் ரயில்வே க்ராஸிங்குகளில் நாம் ஏன் பொறுமை காக்க வேண்டும்? என்பதன் அவசியத்தை இந்த வீடியோ நமக்கு தெளிவாக காட்டுகிறது. ரயில் வருவதற்கு முன்பாக ஒரு பகுதியில் பூம் பேரியர் மூடப்பட்டிருப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் மறு பக்கம் பூம் பேரியர் மூடப்பட்டிருந்ததா? என்பதை வீடியோவில் காண முடியவில்லை. எனினும் ரயில் வருவதற்கு முன்பாக பாதசாரிகள் சிலர் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதை நம்மால் காண முடிகிறது. அப்போது இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்தார். ரயில் வருவதற்கு முன்பு, தண்டவாளத்தை கடந்து விடலாமா? அல்லது வேண்டாமா? என்ற இரண்டு மனதாக அவர் இருந்ததை போல் தெரிகிறது.

ஆனால் ரயில் மிகவும் நெருங்கி வந்து விட்டதை பார்த்ததும், தண்டவாளத்திற்கு மிக நெருக்கமாக அவர் பைக்கை நிறுத்தி விட்டார். ஆனால் அவர் பைக்கை நியூட்ரலுக்கு கொண்டு வரவில்லை என்பதை போல் தெரிகிறது. எனவே பைக் ஜெர்க் ஆகி, தண்டவாளத்திற்கு இன்னும் அருகே விழுந்தது. அந்த இளைஞர் பைக்கை பின்னால் இழுப்பதற்கு முன்னதாக ரயில் அங்கு வந்து பைக்கை நொறுக்கி விட்டது.

அதிர்ஷ்டவசமாக பைக் கீழே விழுந்தவுடன் அந்த இளைஞர் அங்கிருந்து பின்னால் நகர்ந்து விட்டார். எனவே அவருக்கு எந்த விபரீதமும் ஏற்படவில்லை. பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். ரயில்வே க்ராஸிங் பகுதியில் பொறுமையை இழக்க கூடாது என்பதை இந்த வீடியாவின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
ரயில்வே க்ராஸிங் பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்கு, பொறுமையை இழப்பதுதான் முக்கியமான காரணம். ரயில் வருவதற்கு முன்பாக மறு பக்கத்திற்கு செல்வதற்கு பலர் முயல்வதை இந்த வீடியோவில் நாம் தெளிவாக காணலாம். இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இந்த விபரீத செயலில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்த ஒரு சில வினாடிகளில் ரயில் அப்பகுதியை கடக்கிறது. இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் அபாயகரமானது. அதே சமயம் ரயில் மோதிய பிறகு, பைக்கின் பாகங்கள் எப்படி பறக்கின்றன? என்பதையும் வீடியோவில் பார்க்கலாம். இதுபோன்ற சமயங்களில் யாரேனும் அருகில் நின்று கொண்டிருந்தால், அவர்கள் மீது பாகங்கள் மோதி அசம்பாவிதங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் ரயிலுக்கும், பைக்கிற்கும் இடையே இன்னும் நேரடியான தொடர்பு இருந்திருந்தால், மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. ரயில்களை பொறுத்தவரை உடனடியாக வேகத்தை குறைத்து நிறுத்தி விட முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தண்டவாளத்தில் ஏதேனும் ஒரு தடையையோ அல்லது மனிதர்களையோ கண்டாலும், ரயில்களின் வேகத்தை உடனடியாக குறைத்து நிறுத்த முடியாது. இதனை அனைவரும் புரிந்து கொண்டு, ரயில் எந்த பிரச்னையும் இல்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு ஒரு சில நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்தால் போதுமானது. இல்லாவிட்டால் பெரும் அசம்பாவிதங்கள் நிகழலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.