போலியை கட்டுப்படுத்த ஹாலோகிராமுடன் உதிரிபாகங்கள்: பஜாஜ்

Bajaj
டெல்லி: போலி உதிரிபாகங்களை ஒழித்துக்கட்டும் வகையில், தனது ஒரிஜினல் உதிரிபாகங்களை ஹாலோகிராம் முத்திரையுடன் விற்பனைக்கு கொணடுவந்துள்ளது பஜாஜ் ஆட்டோ.

நம் நாட்டின் வாகன விற்பனை கனஜோராக வளர்ந்து வருகிறது. இதற்கு, தக்கவாறு உதிரிபாகங்களுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த அதீத வளர்ச்சியை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டு, பல முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் போலி உதிரிபாகங்களை தயாரித்து விற்கும் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

நாட்டில் விற்பனையாகும் மொத்த உதிரிபாகங்களில் பாதிக்கும் மேற்பட்டவை போலி என அதிர்ச்சி புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், புனே அருகில் உள்ள பிம்பிரி சிஞ்ச்வாட் என்ற இடத்திலுள்ள ஒரு உதிரிபாக விற்பனை மையத்தில் சமீபத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், பஜாஜ் வாகனங்களுக்கு தேவையான போலி உதிரிபாகங்களை பேக்கிங் செய்து, விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த கடையில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போலி வாகன உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தையடுத்து, தனது வாகனங்களுக்கான உதிரிபாகங்களை ஹாலோகிராம் முத்திரையுடன் பஜாஜ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. உ

பஜாஜ் ஆட்டோவின் ஒவ்வொரு உதிரிபாகங்கள் பேக்கிங் கவரிலும் பிரத்யேக பாதுகாப்பு எண்களை கொண்ட ஹாலோகிராம் முத்திரை பொறித்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இதனால், வாடிக்கையாளர்கள் போலி உதிரிபாகங்களிலிருந்து தங்களது வாகனங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கூறுகிறது பஜாஜ் ஆட்டோ.

தாங்கள் வாங்கிய உதிரிபாகங்கள் ஒரிஜினலா என்பதை, ஹாலோகிராம் முத்திரையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தனது இணையதளம் மூலம் சோதனை செய்துகொள்ளலாம் என்றும் பஜாஜ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Bajaj Auto has introduced a special characteristics of its vehicle spares in an effort to counter the fake spare parts.. A holographic strip has been made a part of every packaged parts and it will be checked the security numbers in Bajaj auto website to identify the original one.
Story first published: Monday, June 27, 2011, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X