டிஸ்க் பிரேக்குடன் வந்த மஹிந்திரா செஞ்சூரோ பைக் - விபரம்

Written By:

டிஸ்க் பிரேக் வசதியுடன் புதிய மஹிந்திரா செஞ்சூரோ பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

முன்புற சக்கரத்திற்கான டிஸ்க் பிரேக் வசதியுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

செஞ்சூரோ
 

ஏனெனில், குறைவான விலையில் அதிக வசதிகளை மஹிந்திரா செஞ்சூரோவுக்கு இந்த டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வரவேற்கத்தக்க பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

டிஸ்க் பிரேக் வசதி கொண்ட மஹிந்திரா செஞ்சூரோ கருப்பு, சில்வர் [படங்களை காண்க] என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.

Mahindra Centuro 1
 

ஏற்கனவே செஞ்சூரோ 01, செஞ்சூரோ என்1, செஞ்சூரோ ராக்ஸ்டார் ஆகிய மாடல்களில் விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது டிஸ்க் பிரேக் மாடலும் புதிதாக சேர்ந்துள்ளது.

மஹிந்திரா செஞ்சூரோவில் 8.38 எச்பி பவரையும், 8.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 10.67சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மஹிந்திரா செஞ்சூரோ பைக் ரூ.52,210 மஹாராஷ்டிரா எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Now the Indian two-wheeler manufacturer Mahindra has launched its Centuro with optional disc brake as a safety feature. This new model variant is priced at INR 52,210 ex-showroom, Maharashtra.
Story first published: Monday, June 15, 2015, 13:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark